ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ராஜா ராணி 2 சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபலம்!

ராஜா ராணி 2 சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபலம்!

ராஜா ராணி

ராஜா ராணி

ராஜா ராணி 2 புரமோவில் ஆங்கர் ஆதவன் இடம்பெறும் காட்சிகளும் உள்ளன

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ராஜா ராணி 2 சீரியலில் சாமியார் வேடத்தில் என்ட்ரி கொடுக்கிறார் ஆங்கர் ஆதவன். இதுக் குறித்த புரமோ தற்போது வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ராஜா ராணி 2 சீரியலில் ஆல்யாவின் விலகலுக்கு பின்பு சீரியல் மிகப் பெரிய அடி வாங்கும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் அது கடைசியில் பொய்யானது. சீரியலின் திரைக்கதை, நடிகர்களின் பங்களிப்பு, சீரியலை வழக்கம் போல் அதே சுறுசுறுப்புடன் எடுத்து செல்கிறது. இந்தி சீரியலின் ரீமேக் என்பதால் அதில் இடம்பெறும் அனைத்து சீன்களும் அப்படியே தமிழில் இடம்பெறுவது தான் சின்ன சளிப்பை ஏற்படுத்துகிறது. மத்தப்படி சீரியலில் எந்த குறையும் கூற  முடியாத அளவுக்கு இயக்குனர் ராஜா ராணி 2 சீரியலை எடுத்து செல்கிறார். குறிப்பாக சரவணனாக நடிக்கும் சித்துவின் நடிப்பு ரசிகர்களை அதிகம் கவர, சித்துவுக்காகவே இந்த சீரியலை மிஸ் செய்யாமல் பார்க்கும் கூட்டமும் உருவாகியுள்ளது.

கோபியை பாக்கியாவிடம் சிக்க வைக்க போவது இவரா? பாக்கியலட்சுமியில் ட்விஸ்ட்!

சீரியலில் இப்போது  பார்வதி - விக்கி பிரச்சனை முடிவுக்கு வந்து,  பார்வதிக்கு பாஸ்கருடன் திருமணம் நடந்து முடிந்தது. அதற்குள் செல்வம் பார்வதியை கடத்தி செல்ல சீரியல் பரபரப்பாக நகர்ந்தது. கடைசியில் சந்தியா துரிதமாக செயல்பட்டு தீவிரவாதி செல்வத்தை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தார். நடக்கவிருந்த பெரிய ஆபத்தையும் சரவணன் உதவியுடன் தடுத்து நிறுத்தினார். இப்படி இருக்கையில் தற்போது சீரியலில் அடுத்த பிரச்சனை தொடங்கியுள்ளது.

இந்த விஷயம் ரஜினிக்கு தெரியுமா? படையப்பா சீனை பயன்படுத்திய ஜீ தமிழ் சீரியல்

சந்தியா கோச்சிங் கிளாஸ் போகும் இடத்தில் சாமி சிலை ஒன்று கண்டெடுக்கப்படுகிறது. அதை வைத்து போலி சாமியார் ஒருவர் அங்கு கூட்டம் போட்டு மக்களை பொய் சொல்லி ஏமாற்றும் வேளையில் இறங்குகிறார். இதுக் குறித்த புரமோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த போலி சாமி கேரக்டரில் பிரபல சின்னத்திரை ஆங்கர் ஆதவன் நடிக்கிறார்.
 
View this post on Instagram

 

A post shared by Raja Rani 2 ♥️ (@rajarani2_off)புரமோவில் ஆதவன் இடம்பெறும் காட்சிகளும் உள்ளன. வழக்கம் போல் ஆதவன் போலி சாமியாராக கலக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மிமிக்ரி, ஆங்கரிங் என கலக்கி கொண்டிருக்கும் ஆதவன், அவ்வப்போது ஒரு சில படங்கள் மற்றும் சீரியல்களில் தலை காட்டி வருகிறார். அந்த வகையில் இப்போது ராஜா ராணி 2 சீரியலில் என்ட்ரி கொடுக்கிறார். அப்படி என்றால் அடுத்த சில வார எபிசோடில் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Vijay tv