• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அன்று நீயா நானாவில் தோன்றிய முகம்... இன்றே அதே விஜய் டிவி சீரியலில் வில்லியாக அர்ச்சனா!

அன்று நீயா நானாவில் தோன்றிய முகம்... இன்றே அதே விஜய் டிவி சீரியலில் வில்லியாக அர்ச்சனா!

ரசிகர்கள் அர்ச்சனாவை நிஜ வில்லியாக நினைத்து திட்டுகிறார்கள்

  • Share this:
    நீயா நானா நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களில் ஒருவராக கலந்து கொண்ட அர்ச்சனா இன்று அதே விஜய் டிவி டாப் சீரியலில் வில்லியாக கலக்கி வருகிறார். கண்டிப்பாக இது பாராட்டுக்குரிய வளர்ச்சி தான்.

    சின்னத்திரையில் நுழைந்த மிக குறுகிய காலத்திலே தனக்கென தனி இடத்தை பிடித்துவிட்டார் நடிகை அர்ச்சனா. விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ராஜா ராணி 2 சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அர்ச்சனாவை திட்டி தீர்க்காத இல்லத்தரசிகளே இல்லை எனலாம். அதுதானே அவரின் நடிப்புக்கு கிடைக்கும் பாராட்டு. அந்த கதாபாத்திரம் அந்த அளவுக்கு ரசிகர்கள் மனதில் ஒன்றி இருப்பதால் தான் ரசிகர்கள் அர்ச்சனாவை நிஜ வில்லியாக நினைத்து திட்டுகிறார்கள். மொத்தத்தில் முதல் சீரியலில் சபாஷ் வாங்கி விட்டார் அர்ச்சனா.

    அர்ச்சனா பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். இவரின் அப்பா கல்லூரி பேராசியரியர். வழக்கம் போல் இன்ஜினியரிங் படித்த அர்ச்சனாவிற்கு சினிமா மீது ஆசை. அதிலும் ஆங்கராக வேண்டும் என்பதையே லட்சியமாக வைத்திருந்துள்ளார். அதுபோக டப்ஸ்மேஷ், டிக்டாக் ஆப்களிலும் தனது நடிப்பு திறமையை காட்டி வந்துள்ளார், இன்று சின்னத்திரையில் இருக்கும் பலரும் இதுப்போன்ற ஆப்களில் திறமையைக் காட்டிய நடிகர்கள் தான். ஈஸியாக சோஷியல் மீடியாவில் வைரல் ஆனார்.

    குடும்பத்தினருடன் அர்ச்சனா


     

    இந்த வாய்ப்பை பயன்படுத்தி முதன்முறையாக ஆதித்யா காமெடி தொலைக்காட்சியில், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இயல்பாகவே நல்ல குரல் வளம் பெற்ற இவர், ஆங்கரிங்கிலும் கலக்கினார். அதன் பின்பு இன்ஸ்டா மூலம் விஜய் டிவி வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஆனால் அதற்கு முன்பே விஜய் டிவியில் ஒளிப்பரப்பான நீயா நானா ஷோவிலும் பங்கேற்பாளர்களில் ஒருவராக அர்ச்சனா கலந்து கொண்டார்.

    ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த விஜய் டிவி சீரியல்... ஹீரோயினால் தெரிய வந்த உண்மை!

    இன்றை அதே விஜய் டிவி சீரியலில் வில்லி ரோலில் அசத்தி நல்ல வளர்ச்சியை கண்டுள்ளார். அது மட்டுமில்லை இப்போ அர்ச்சனா ரொம்ப பிஸி. பிரைடல் ஃபோட்டோ ஷூட், மாடல் ஷூட் போன்றவற்றில் பங்கேற்கிறார். அதுபோக, முரட்டு சிங்கிள், கலக்கல் ராஜா, கில்லாடி ராணி போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அவ்வப்போது தனது குடும்பம் மற்றும் நண்பர்களுடனும் நேரத்தை செலவழித்து வாழ்க்கையை என்ஜாய் செய்கிறார்.


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: