ராஜா ராணி 2வின் 500 வது எபிசோடு வெற்றி கொண்டாட்டம் கூடிய விரைவில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகவுள்ளது. இந்த கொண்டாட்டத்தில் ஆல்யா மானசா மட்டும் மிஸ்ஸிங். அதே நேரம் அவர் இல்லாத குறையை அர்ச்சனா மற்றும் ரியா தீர்த்து வைக்கவுள்ளனர்.
ஆல்யா மானசா , சஞ்சீவ் நடித்த ராஜா ராணி சீரியல் விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிய சீரியல்களில் ஒன்று . இந்த சீரியலுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது ராஜா ராணி 2 சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது. ராஜா ராணி சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்கு ஆல்யா மானசா என்ற நடிகை கிடைத்தார். இந்த சீரியலில் ஜோடியாக நடித்து வந்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆல்யா.திருமணத்திற்கு பிறகு கர்ப்பமானதால் சீரியல், சின்னத்திரையில் இருந்து விலகினார். அதே நேரத்தில் ராஜா ராணி முதல் பாகமும் முடிக்கப்பட்டது.
செம்பருத்தி வில்லி நந்தினிக்கு என்ன நடந்தது? சீரியல் வெற்றி விழாவில் வெடித்த சர்ச்சை!
குழந்தை பெற்று 6 மாதம் கழித்து மீண்டும் கம்பேக் கொடுத்தார் ஆல்யா. அவரை லீட் ரோலில் நடிக்க வைத்து ராஜா ராணி 2 எடுக்க முடிவு செய்தார் இயக்குனர் பிரவீன். இந்த முறை நடிகராக திருமணம் சீரியல் புகழ் சித்து களம் இறக்கப்பட்டார். ராஜா ராணி முதல் பாகத்தை போலவே ராஜா ராணி 2வும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதற்கு முக்கியமான காரணம் ஆல்யா மானசா. அதே போல் ஆல்யா - சித்து ஜோடியின் கெமிஸ்ட்ரி. இந்த சீரியலில் வெற்றிக்கு இவர்களின் நடிப்பு பிளஸ் ஆல்யா மற்றும் சித்துவின்
ரொமான்ஸ் காட்சிகள் மிகப்பெரிய கன்டென்டு களமாக இருந்து வந்தது. டி. ஆர்.பியில் நல்ல ரேட்டிங்கில் இருந்தது.
இப்படி சீரியல் வெற்றிப்பாதையில் சென்ற நேரத்தில் 2வது குழந்தைக்கு தாயாகி ஆல்யா சீரியலை விட்டு விலகினார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சீரியல் டி.ஆர்.பியும் அடி வாங்கியது. பின்பு சீரியலில் சந்தியாவாக அறிமுகம் ஆனார் ரியா. இவரின் நேர்த்தியான நடிப்பால் ராஜா ராணி தொடர் மீண்டும் சூடுப்பிடிக்க தொடங்கியது. அதே போல் அர்ச்சனாவும் வில்லியாக பட்டையை கிளப்ப வழக்கம் போல் சீரியல் பரபரப்பாக ஒளிப்பரப்பாக தொடங்கியது.
தற்போது ராஜா ராணி 2 சீரியல் 500 எபிசோடை தொட்டு வெற்றிக்கரமாக ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் ராஜா ராணி 2வின் 500 வது எபிசோடு கொண்டாட்டம் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகவுள்ளது. ஏற்கெனவே இதற்கான ஷூட்டிங் முடிந்து விட்ட நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படத்தில் சீரியலின் முன்னாள் நாயகி ஆல்யா மிஸ்ஸிங். இது ஆல்யா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது எப்போதுமே சுட்டி தனத்துடன் கலகலப்பாக பேசும் ஆல்யா இந்த வெற்றி கொண்டாட்டத்தில் இல்லை, ஆனால் அவர் இடத்தில் அர்ச்சனா மறும் ரியா ஆகியோர் ரசிகர்களை மகிழ்விப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.