Home /News /entertainment /

இவ்வளவு சீக்கிரமா மாட்டிக்கிட்டீங்களே ஆதி.. என்ன செய்ய போகிறார் சந்தியா?

இவ்வளவு சீக்கிரமா மாட்டிக்கிட்டீங்களே ஆதி.. என்ன செய்ய போகிறார் சந்தியா?

ராஜா ராணி ஆதி

ராஜா ராணி ஆதி

ராஜா ராணியில் சந்தியா எல்லா உண்மையையும் கண்டுப்பிடிக்க ஆதி கடைசியில் சந்தியா காலில் விழுகிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ராஜா ராணி 2 சீரியலில் ஆதி செய்த திருட்டை ஆதாரத்துடன் கண்டுப்பிடித்துவிட்டார் சந்தியா. இதுக் குறித்த புரமோ தற்போது வெளியாகியுள்ளது.

    ராஜா ராணி சீரியலில் சிவகாமியின் கடைசி மகன் ஆதி, ஜெஸி என்ற பெண்ணை காதலிக்கிறார். பல பிரச்சனைகளுக்கு நடுவே இந்த கல்யாணம் முடிவாகிவிட்டது. ஜெஸி வேற மதம் என்பதால் சிவகாமி இந்த திருமணத்திற்கு ஓகே சொல்லவில்லை. அதுமட்டுமில்லை ஜெஸி வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஆதி தான் என்ற காரணமும் முன்பு சிவகாமிக்கு தெரியாது. அதனால் தான் ஆரம்பத்தில் ஜெஸியை வேண்டாம் என்றார். ஆனால் கடைசியில் ஆதி - ஜெஸி காதலித்த விஷயம் எல்லோருக்கும் தெரிந்து விட்டது. சந்தியா ஒருவழியாக கல்யாணத்திற்கு  சம்மதம் வாங்கி விட்டார்.



    3 மாசம் லோன் கட்டல.. ரசிகர்களுக்கு தெரியாத விஷயங்களை பகிர்ந்த குக் வித் கோமாளி மணிமேகலை!

    ஜெஸியை தன் பக்கம் இழக்க அர்ச்சனா வேற ஒரு பிளான் போட்டார். இது எல்லாமே சொதப்ப கடைசியில் ஆதி - ஜெஸி கல்யாணம் கூடிய விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கு நடுவில் தான் சந்தியா ஐபிஎஸ் தேர்வில் பாஸ் ஆகிறார்.  அவரை உடல்தகுதி தேர்வுக்கு அழைத்து வீட்டுக்கு லெட்டர் வருகிறது. அப்போது தான் சிவகாமி செக் வைக்கிறார். சந்தியா சென்னைக்கு செல்ல வேண்டும் என்றால் வீட்டில் காணாமல் போன 5 லட்சம் பணத்தை யார் எடுத்தது? என கண்டுப்பிடிக்க வேண்டும் என்கிறார்.



    சந்தியாவும் அதை கண்டுப்பிடிக்கிறார். கையும் களவுமாக ஆதி மாட்டிக் கொள்கிறார். சரவணன் குக்கிங் போட்டியில் ஜெயித்த 5 லட்சம் பணத்தை எடுத்து ஆதி ஜாலியாக செலவு செய்தது, ஜெஸிக்கு வைர நெக்ளஸ் வாங்கி கொடுத்தது என எல்லாவற்றையும் சந்தியா கண்டுப்பிடிக்க ஆதி கடைசியில் சந்தியா காலில் விழுகிறார். இப்போது சந்தியா எடுக்க போவது தான் முடிவு. ஆதி பற்றிய உண்மையை சொல்லி சென்னைக்கு செல்வதா? இல்லை ஆதி - ஜெஸி கல்யாணம் நடக்க வேண்டும் என நினைத்து அமைதியாக இருப்பதா? முடிவு சந்தியாவிடம் தான்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி