Home /News /entertainment /

சிவகாமி வீட்டில் அடிக்க போகும் அடுத்த புயல் .. மாட்ட போகும் ஆதி!

சிவகாமி வீட்டில் அடிக்க போகும் அடுத்த புயல் .. மாட்ட போகும் ஆதி!

ராஜா ராணி

ராஜா ராணி

ராஜா ராணி 2 வில் ஆதி - ஜெஸி காதலை சிவகாமி ஏற்றுக் கொள்வாரா?

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ராஜா ராணி 2 சீரியலில் ஆதி - ஜெஸி காதல் விஷயம் இன்றைய எபிசோடில் சிவகாமி குடும்பத்திற்கு தெரிய வருகிறது. இதுக் குறித்த பரபரப்பு புரமோ தற்போது வெளியாகியுள்ளது.

    ராஜா ராணி சீரியலில் சிவகாமியின் கடைசி மகன் ஆதி,  ஜெஸி என்ற பெண்ணை காதலிக்கிறார். இது அர்ச்சனாவுக்கு மட்டுமே தெரியும். அர்ச்சனா ஆதிக்கு நல்லது செய்வதாக சொல்லி ஏமாற்றுகிறார். ஜெஸியை மாட்டி விட பிளான் செய்து தனது வளைக்காப்புக்கு வர வைக்கிறார். அர்ச்சனாவுக்கு மேக்கப் போட ஜெஸியும் வருகிறார். ஆதி - அர்ச்சனா இருவரும் ஏதோ ஒரு விஷயத்தை மறைப்பது சந்தியாவுக்கு தெரிகிறது. ஆனால் அவர் அதை கண்டுக் கொள்ளவில்லை. இப்படி இருக்கையில் அர்ச்சனாவின் வளைக்காப்புக்கு  வரும் ஜெஸி கர்ப்பமாக இருப்பது  அனைவருக்கும் தெரிய வருகிறது.

    பாண்டியன் ஸ்டோர்ஸில் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் பிரபலம்! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

    ஆதிக்கு அடி பட, இதை பார்த்து ஜெஸி துடித்து போகிறார். இதனால் சிவகாமி அம்மாவுக்கு சந்தேகம் வருகிறது., இப்படி இருக்கையில் திடீரென்று ஜெஸி மயங்கி கீழே விழுகிறார். ஆதியின் பாட்டி அவரின் கையை பிடித்து  ஜெஸி கர்ப்பமாக இருப்பதை கண்டுப்பிடித்து  சொல்லி விடுகிறார். ஜெஸிக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை. இதனால் ஜெஸி தவறான பெண் என முத்திரை குத்தி அவருக்கு மேக்கப் போட்டதற்கான பணத்தை கொடுத்து வெளியே தள்ளுகிறார் சிவகாமி.

    பூஜை அறையில் கூட ஃபோட்டோவுக்கு போஸ்.. கேமரா அழகி ஷிவானி!

    ஜெஸிக்கு கோபம் தலைக்கு ஏற மொத்த உண்மையையும் சொல்லி விடுகிறார். ஆதியும்  நானும் காதலிக்கிறோம் என்பதில் தொடங்கி அவரின் குழந்தைக்கு ஆதி தான் தந்தை என்றும் சொல்கிறார். சிவகாமிக்கு அதிர்ச்சி தாங்கவில்லை. ஆதி பதில் பேச முடியாமல் அப்படியே நிற்கிறார். சரவணன், சந்தியா, செந்தில், பார்வதி என எல்லோரும் ஷாக் ஆகிறார்கள். அர்ச்சனா மட்டும் நினைத்த காரியம் நடந்து விட்டது என ஹேப்பி ஆகிறார்.



    அடுத்து என்ன நடக்கும்? ஆதி - ஜெஸி காதலை சிவகாமி ஏற்றுக் கொள்வாரா? சந்தியாவின் திறமையால் இந்த கல்யாணம் நடக்குமா? இல்லையா> எனபதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி