Home /News /entertainment /

ராஜா ராணி 2வில் அர்ச்சனாவுக்கு வளைகாப்பு!

ராஜா ராணி 2வில் அர்ச்சனாவுக்கு வளைகாப்பு!

ராஜா ராணி 2

ராஜா ராணி 2

அர்ச்சனாவுக்கு குழந்தை பிறப்பது , பெண் குழந்தையை ஆண் குழந்தையாக மாற்றுவது என ஏகப்பட்ட திருப்பங்கள் அரங்கேறவுள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ராஜா ராணி 2 சீரியலில் அடுத்து அர்ச்சனாவின் வளைகாப்பு எபிசோடுகள் ஒளிப்பரப்பாகவுள்ளன. இதுக் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

    ராஜா ராணி 2 சீரியல் பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிப்பரப்பாகி வருகிறது. சந்தியா போலீஸ் ஆவதற்கு சிவகாமி ஓகே சொல்லிவிட்டார். அதே நேரம் குழந்தை பெற்று தர வேண்டும் என செக்கும் வைத்து விட்டார். இப்படி இருக்கையில் அடுத்து சந்தியா ஐபிஎஸ் தேர்வு எழுதுவது, பின்பு ட்ரெயினிங் செல்வது என ஏகப்பட்ட திருப்பங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. இது ஒருபுறம் இருக்க அர்ச்சனாவுக்கு குழந்தை பிறப்பது , பெண் குழந்தையை ஆண் குழந்தையாக மாற்றுவது என ஏகப்பட்ட திருப்பங்கள் அரங்கேறவுள்ளன.

    இந்நிலையில் சீரியலில் அடுத்து அர்ச்சனாவின் வளைகாப்பு ட்ராக் டெலிகாஸ்ட் ஆகவுள்ளது. இதற்கான ஷூட்டிங் ஏற்கெனவே முடிந்து விட்டது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அர்ச்சனாவின் அம்மா, அப்பா , தங்கை என மொத்த குடும்பமும் வர சிவகாமி வீட்டில் அர்ச்சனாவின் வளைகாப்பு விமர்சையாக நடைபெறுகிறது.



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Serials (@tamilserialexpress)






    இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் எபிசோடுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.  கண்டிப்பாக இதிலும் அர்ச்சனா எதாவது வில்லத்தனம் செய்வார் என்பதை யூகிக்க முடிகிறது. அதுமட்டுமில்லை பார்வதியும் பாஸ்கருடன் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Mask Kanmani (@mask_kanmani)






    அர்ச்சனாவுக்கு ஏற்கெனவே சந்தியா என்றாலே பிடிக்காது. அப்படி இருக்கையில் சந்தியா போலீஸ் ஆகக்கூடாது என பல சதிகளை செய்து வருகிறார். சந்தியா தேர்வு எழுதுவதற்குள் இன்னும் என்னென்ன செய்ய போகிறார் என தெரியவில்லை. அதே போல் சிவகாமியின் மனதை மாற்றவும் முயற்சி செய்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி