Home /News /entertainment /

ராஜா ராணி 2 சித்து மனைவி ஷ்ரேயாவுடன் வாங்கிய பிரம்மாண்ட கார் - விலையை கேட்டா அசந்து போவீங்க!

ராஜா ராணி 2 சித்து மனைவி ஷ்ரேயாவுடன் வாங்கிய பிரம்மாண்ட கார் - விலையை கேட்டா அசந்து போவீங்க!

சித்து - ஷ்ரேயா

சித்து - ஷ்ரேயா

ராஜா ராணி சீரியல் 2 பிரபலமான சித்து 23 லட்சம் ரூபாய் மதிப்பிள்ள டாப் மாடல் காரை வாங்கியுள்ளார்.

  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டாப் சீரியல்கள் பட்டியலில் எப்போதுமே ‘ராஜா ராணி சீசன் 2’ தனி இடம் பிடித்து வருகிறது. 2017 ஆம் ஆண்டு வெளிவந்த ராஜா ராணி சீரியல் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இதில் நடித்த ஆல்யா மானசா, சஞ்சீவ் ஜோடி காதலித்து திருமணம் செய்து கொண்டதால், இந்த சீரியல் ரசிகர்கள் மனதிற்கு இன்னும் நெருக்கமானதாக மாறியது.

  இத்தொடர் மாபெரும் வெற்றி அடைந்ததை அடுத்து, ராஜா ராணி சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது. ராஜா ராணி முதல் சீசனைப் போலவே, இரண்டாவது சீசனிலும் கதாபாத்திரங்களும், நடிகர்களும் அதற்கு நல்ல வலுசேர்த்திருக்கிறார்கள். சந்தியா என்ற கேரக்டரில் ஆல்யா மானசா நடித்து வருகிறார். ஹீரோவாக நடிகர் சித்து, சரவணன் என்ற கேரக்டரில் சந்தியாவின் கணவராக நடித்து வருகிறார். ஒரு நல்ல ஐ.பி.எஸ் அதிகாரியாக வேண்டும் என லட்சிய கனவோடு இருக்கும் ஹீரோயின் சந்தியா, எதிர்பாராதவிதமாக சரவணனை திருமணம் செய்து கொள்கிறார். ஒருவழியாக மாமியார் மெச்சும் மருமகளாக சந்தியா பெயர் எடுத்துவிட்டார். இதனால் பொறாமையில் பொங்கும் இரண்டாவது மருமகளான அர்ச்சனா, சந்தியாவை எதிலாவது சிக்க வைக்க வேண்டும் என பல சதி திட்டங்களை தீட்டி வருகிறார்.

  குடும்பத்தில் ஏற்படும் அத்தனை பிரச்சனைகளில் இருந்து மனைவியை காப்பது, அவளது கனவுக்கு தோள் கொடுப்பது என பாசக்கார கணவன் சரவணாக சித்து அசத்தி வருகிறார். சீரியலால் பணம், புகழ் மட்டுமல்ல திருமண வாழ்க்கையும் சித்துவிற்கு கிடைத்தது.

  2018-ஆம் ஆண்டு கலர்ஸ் தொலைக்காட்சியில் வெளியான திருமணம் என்ற தொடரில் கோபிகாந்த் இயக்கத்தில் சந்தோஷ் என்ற பெயரில் நடித்திருந்தார். இந்த சீரியலில் கதாநாயகியாக ஸ்ரேயா அஞ்சன் என்பவர் நடித்திருந்தார். இவர்களது காம்பினேஷன் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. சீரியலில் மட்டுமல்ல, நிஜத்திலும் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த ஆண்டு இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டது. கணவன், மனைவி சீரியலில் பிசியாக நடிப்பது மட்டுமின்றி யூ-டியூப் சேனல் ஒன்றையும் தொடங்கி நடத்தி வருகிறார்கள்.

  முன்னெச்சரிக்கையுடன் இருந்தும் ஸ்ருதி ஹாசனை விடாத கொரோனா

  மேலும் சோசியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக வலம் வரும் சித்து, ஸ்ரேயா இருவரும் தங்களது வாழ்க்கையில் நடக்கும் மகிழ்ச்சியான விஷயங்களை ரசிகர்களுடன் ஷேர் செய்து வருகின்றனர். அப்படி தற்போது ஸ்ரேயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாங்கள் புதிதாக கார் வாங்கி இருப்பதை புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். இருவரும் காருடன் நின்றிருக்கும் படத்தை, "Welcome Home #beast " என பதிவிட்டுள்ளார்.

  எப்படி இருந்த விஜயகாந்த் இப்படி ஆகிட்டாரே... அதிர்ச்சியைக் கிளப்பும் புகைப்படம்
  MG காரின் டாப் மாடலை சித்து சுமார் 23 லட்சம் ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார். புது கார் வாங்கியுள்ள சித்து, ஸ்ரேயா தம்பதிக்கு ஆல்யா மானசாவின் கணவரும், பிரபல சீரியல் நடிகருமான சஞ்சீவ் கார்த்திக், சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னதாக திருமணத்திற்கு பிறகு வந்த முதல் பிறந்தநாளை முன்னிட்டு, சித்து தனது மனைவி ஸ்ரேயாவிற்கு கார் ஒன்றை பரிசளித்தது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published:

  Tags: TV Serial, Vijay tv, Zee tamil

  அடுத்த செய்தி