Home /News /entertainment /

ராஜா ராணி 2 பிரபலமா இது? வைரலாகும் பழைய போட்டோ.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

ராஜா ராணி 2 பிரபலமா இது? வைரலாகும் பழைய போட்டோ.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

ராஜா ராணி 2

ராஜா ராணி 2

Raja Rani 2 Serial | ராஜா ராணி 2 சீரியலில் சந்தியாவாக நடிக்கும் ரியாவின் பழைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஸ்டார் விஜய் டிவி-யில் ரசிகர்களுக்கு பிடித்தமான பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. வித்தியாசமான கான்செப்ட்டில் வித விதமான ஷோக்களை வரிசை கட்டி டெலிகாஸ்ட் செய்வதற்கு விஜய் டிவி-க்கு நிகர் விஜய் டிவி தான் என்ற ரசிகர்களின் எண்ணத்தை பல ஆண்டுகளாக காப்பாற்றி வருகிறது சேனல் நிர்வாகம்.

கலகலப்பான ரியாலிட்டி ஷோக்கள் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ள அதே நேரத்தில் பல சூப்பர் ஹிட் சீரியல்கள் மூலமும் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்து உள்ளது ஸ்டார் விஜய் டிவி. விஜய் டிவி-யில் காற்றுக்கென்ன வேலி, பாவம் கணேசன், நம்ம வீட்டு பொண்ணு, தென்றல் வந்து என்னை தொடும், முத்தழகு, ஈரமான ரோஜாவே, நாம் இருவர் நமக்கு இருவர் 2, மௌனராகம் 2, தமிழும் சரஸ்வதியும், பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா உள்ளிட்ட பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

அந்த வகையில் திங்கள் - சனி வரை இரவு 9.30 முதல் 10 மணி வரை ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் ஹீரோவாக நடிகர் சித்து,   'சரவணன்' என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். ராஜா ராணி சீசன் 1-ல் செம்பாவாக நடித்த நடிகை ஆல்யா மானசா, லீட் ரோலில் சந்தியா என்ற கேரக்டரில் நடித்து வந்தார். மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த சீரியலில் ஹீரோயினாக நடித்து அசத்தி கொண்டிருந்த நடிகை ஆல்யா மானசா - சஞ்சீவ் ஜோடிக்கு சமீபத்தில் இரண்டாவது குழந்தை பிறந்தது.

also read : ஒருவழியா ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த சம்பவம் நடந்துவிட்டது!பிரசவத்திற்கு பின் மீண்டும் இந்த சீரியலில் தொடர்ந்து நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய சந்தியாவாக அறிமுகமாகி இருக்கும் ரியாவே இனி தொடர்ந்து ராஜா ராணி 2-வில் நடிப்பார் என்றும் சிறிது கால ஓய்விற்கு பிறகு நல்ல ப்ராஜக்ட் வந்தால் மீண்டும் சின்னத்திரைக்கு வருவதாக சோஷியல் மீடியா மூலம் ரசிகர்களுக்கு தகவல் தெரிவித்தார் ஆல்யா மானசா. இதனால் அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்தாலும் சீரியலில் சந்தியா கேரக்டரில் ஓரளவு பொருந்தி விட்டார் ரியா. இவரது முழுப்பெயர் ரியா விஸ்வநாதன். இவர் மாடல் மற்றும் நடனக் கலைஞர் ஆவார். ராஜா ராணி 2 மூலம் முதல்முறையாக சின்னத்திரையில் அறிமுகமாகி உள்ளார்.

also read : எங்கள் ஃபேவரெட் இடமான பால்கனியில் திருமணம் - ரன்பீர் கபூரை கரம் பிடித்த ஆலியா பட்!இதனிடையே சின்னத்திரையில் புதுமுக நடிகையாக அறிமுகமாகி உள்ள ரியா விஸ்வநாதனின் பழைய போட்டோ ஒன்று சோஷியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன் 2017-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ரியாவின் போட்டோவை பார்த்து சின்னத்திரை ரசிகர்கள் ஷாக்காகி இருக்கிறார்கள்.

also read : முதல் நாளிலேயே பீஸ்ட் படத்தின் வசூலை தட்டி தூக்கிய கே.ஜி.எஃப் 2!
 
View this post on Instagram

 

A post shared by Riya (@riya.vishwanathan)

ஏனென்றால் தற்போது சீரியலில் பார்த்து வரும் ரியாவிற்கும், பழைய போட்டோவில் உள்ள ரியாவிற்கும் இடையில் இருக்கும் முக வேறுபாடே இதற்கு காரணம். தற்போது சற்று ஒல்லியான முகத்தோற்றத்தில் இருக்கும் ரியா, 5 ஆண்டுகளுக்கு முன் கன்னத்தில் சதையுடன் சற்று குண்டான முகத்தோற்றத்தில் இருக்கிறார். இந்த போட்டோ இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: TV Serial

அடுத்த செய்தி