இந்தி சீரியலின் காப்பின்னு சொன்னாங்க.. ஆனா ராஜா ராணி 2ல கதை வேற மாறி போகுது!

ராஜா ராணி சீரியல்

இந்தி சீரியலில் சபிதா கதாபாத்திரம் சூர்யாவின் தங்கையாக நடித்திருப்பார். அவர் ஒருவரை காதலித்து அவரையே இறுதியாக திருமணம் செய்துகொள்வார்.

 • Share this:
  raja rani 2 serial promo : விஜய் தொலைக்காட்சியில் பீக் டைமில் ஒளிப்பரப்பாகும் ராஜா ராணி 2 சீரியலின் கதைக்களம் ரசிகர்கள் சற்றும் எதிர்பார்க்காத பாணியில் சென்றுக்கொண்டிருக்கிறது.

  சின்னத்திரையில் பெரும்பாலும் சினிமா படங்களின் பெயரை கொண்ட சீரியல்கள்தான் ஒளிப்பரப்பாகி வருகின்றன. ரோஜா, பாரதி கண்னம்மா, ராஜாவின் பார்வை, மெளன ராகம் என இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வரிசையில் ராஜா ராணி பார்ட்1 மிகப்பெரிய வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து பார்ட் 2 சீரியலும் இப்போது வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் ஆல்யாவும், சித்துவும் நடித்து வருகின்றனர்.

  இந்த சீரியலின் முதல் ப்ரோமோ வெளியாகிய போதே ரசிகர்கள் கலாய்த்து தள்ளினர். காரணம் விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ‘என் கணவர் என் தோழன்’ என்ற இந்தி தொடரின் ரீமேக்காக இந்த தொடர் இருப்பது. ”தியா ஓர் பாதீ ஹம்’ என்ற அந்த தொடர் தமிழில் டப் செய்யப்பட்டு மிகப்பெரிய வெற்றி பெற்றது. விஜய் தொலைக்காட்சியில் 927 எபிசோட் வரை மட்டும் ஒளிப்பரப்பட்ட அந்த தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்நிலையில் அந்த தொடரின் ரீமேக்காக ராஜா ராணி 2 என புதிய சீரியல் ஒளிப்பரப்பாக தொடங்கியது.

  also read அந்த சீரியலை காப்பி அடிக்கிறதா விஜய் டிவி? புது ரூட்டில் செந்தூரப்பூவே சீரியல்!

  ஆரம்பத்தில் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆல்யாவின் நடிப்புகாகவே சிலர் இந்த தொடரை பார்த்து வந்தனர். பின்பு விறுவிறுப்பான கதைகளத்தால் இல்லத்தரசிகளை கவர்ந்து வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பெரும்பாலான காட்சிகள், சீன்கள் இந்தி சீரியலில் இடம்பெற்றது போலவே இருந்தன. லைட்டாக பட்டி டிங்கரிங் பார்த்து நம்ம ஊருக்கு ஏற்றார் போல் மாற்றப்பட்டது. இந்நிலையில் இந்தி சீரியலில் சபிதா கதாபாத்திரம் சூர்யாவின் தங்கையாக நடித்திருப்பார். அவர் ஒருவரை காதலித்து அவரை இறுதியாக திருமணம் செய்துகொள்வார். இப்படியாக தான் கதை இருக்கும்.  ஆனால் ராஜா ராணி 2 வில் இந்த ரோல் சற்று வேறுவிதமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் ஒளிப்பரப்பான புரமோவில் சரவணனின் தங்கையாக நடிக்கும் பார்வதியை அவரின் காதலர் பலாத்காரம் செய்ய முயல்வது போல் காட்சிகள் வெளியாகியுள்ளன. அதை அவரின் அன்ணி சந்தியா வந்து தடுக்க, பின்னாடியே வரும் சரவணன் அவனை அடித்து தங்கையை காப்பாற்றுகிறான். பிறகு சந்தியாவிடம் பார்வதிக்காக நன்றியும் கூறுகிறான். இந்த சீன்கள் இந்த வார எபிசோடுகளில் நீங்கள் பார்க்கலாம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sreeja Sreeja
  First published: