• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ராஜா ராணி சரவணுக்காக ஒரே இடத்தில் திரண்ட சின்னத்திரை பிரபலங்கள்!

ராஜா ராணி சரவணுக்காக ஒரே இடத்தில் திரண்ட சின்னத்திரை பிரபலங்கள்!

ராஜா ராணி சரவணன்

ராஜா ராணி சரவணன்

இருவரும் சேர்ந்தே சோஷியல் மீடியாவில் பல போஸ்ட்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள்

  • Share this:
    ஸ்டார் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியல்களில் ஒன்று ராஜா ராணி சீசன் 2. நாள்தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் முந்தைய ராஜா ராணி சீசன் 1ல் சென்பா கேரக்டரில் நடித்த நடிகை ஆல்யா மானசா, சந்தியா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.

    இவருக்கு ஜோடியாக சரவணன் என்ற கேரக்டரில் பிரபல சீரியல் நடிகர் சித்து நடித்து வருகிறார். நடிகர் சித்துவுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. காரணம் இவர் இதற்கு முன் கலர்ஸ் தமிழ் சேனலில் நடித்த "திருமணம்"என்ற சீரியல் தான். இந்த சீரியலில் நடிகர் சித்து ஹீரோவாக நடித்தார். இவருக்கு ஜோடியாக ஹீரோயின் கேரக்டரில் பிரபல நடிகை ஷ்ரேயா அஞ்சன் நடித்தார்.

    இந்த சீரியல் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. இதற்கு முக்கிய காரணம் நடிகர் சித்து - நடிகை ஷ்ரேயா அஞ்சன் ஆகிய இருவரின் கெமிஸ்ட்ரியும் சரியாக ஒர்கவுட் ஆனது. ரசிகர்களுக்கு இந்த ஜோடி மிகவும் பிடித்து போனது. சோஷியல் மீடியாக்களில் இருவரும் நிஜ வாழ்க்கையில் இணைந்தாலும் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று பேசப்பட்டது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிஜமாக்கியது இந்த ஜோடி. ஒரு கட்டத்தில் இருவரும் உண்மையாகவே காதலிக்க துவங்கினார்கள். தங்களது காதல் விவகாரத்தை சோஷியல் மீடியாக்கள் மூலம் இருவரும் அவ்வப்போது ரசிகர்களுக்கு வெளிப்படுத்தினர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன் பொது நிகழ்ச்சி ஒன்றி இந்த ஆண்டிற்குள் திருமணம் செய்து கொள்ள போவதாக கூறினர். இதனை அடுத்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இந்த ஜோடிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இவர்களது திருமண தேதி குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இருவரும் சேர்ந்தே சோஷியல் மீடியாவில் பல போஸ்ட்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். இதனிடையே நடிகர் சித்து தனது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடி வருகிறார். 1990-ல் செப்டம்பர் 25 பிறந்த இவரது முழு பெயர் சித்தூரன். sidhu_sid_forever என்ற இன்ஸ்டா ஃபேன் பேஜில் போஸ்ட் செய்யப்பட்டுள்ள வீடியோவில், நடிகர் சித்து காதலி ஷ்ரேயா அஞ்சனுடன் மகிழ்ச்சியாக கேக் வெட்டி தன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்கிறார்.



     




    Instagram இல் இந்த இடுகையை காட்டு





     

    Sidhusid Gem of the World 💎🔥 இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@sidhu_spl)






    கேக் அருகில் வைக்கப்பட்டுள்ள டெக்ரேஷனில் இருந்து மத்தாப்பு தீப்பொறி நாலாபுறமும் தெறிக்க, காதலி மற்றும் நண்பர்கள் கை தட்டி ஆரவாரம் செய்ய நடிகர் சித்து கேக் வெட்டி  மிகவும் மகிழ்ச்சியாக பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். ரசிகர்கள் மற்றும் சக நடிகர்கள் என பலரும் நடிகர் சித்துவுக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: