• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • பேப்பரில் செய்தியாக வந்த ராஜா ராணி சீரியல் சந்தியா.. அந்த விஷயம் தான் காரணமா?

பேப்பரில் செய்தியாக வந்த ராஜா ராணி சீரியல் சந்தியா.. அந்த விஷயம் தான் காரணமா?

ராஜா ராணி சந்தியா

ராஜா ராணி சந்தியா

அண்மையில் வைரலான துளசியைப் பற்றியும் இருவரும் பேசினர்

 • Share this:
  ராஜா ராணி சீரியலில் சரவணனும் - சந்தியாவும் செய்த நற்செயலால் இருவரின் பெயரும் புகைப்படத்துடன் செய்தித்தாளில் வெளிவந்துள்ளது.

  விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ராஜா ராணி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. அதிலும் சந்தியாவாக நடிக்கும் ஆல்யா மானஸா சின்னத்திரை சாவித்ரி என்றே சொல்லலாம். இவரின் நடிப்புக்காகவே ஆரம்பத்தில் இந்த சீரியலைப் பார்த்த ரசிகர்கள் கூட்டம் இப்போது வரை தொடர்கின்றனர். சீரியலில் ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு படித்துக் கொண்டிருந்த சந்தியா, இன்று ஸ்வீட் கடைக்காரர் சரவணனை கல்யாணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் திருமண வாழ்க்கை பிடிக்காமல் அண்ணன் அண்ணிக்காக பொறுமையாக இருந்தவர். இன்று சரவணனின் அன்பையும் மொத்த குடும்பத்தையும் புரிந்து கொண்டு சந்தோஷமாக வாழ ஆசைபப்டுகிறார். ஆனால் சரவணன் படித்த சந்தியாவின் கனவை சிதைத்து விட கூடாது அவருக்கு விவகாரத்து வழங்கி அவர் ஆசைப்பட்டது போல் ஐபிஎஸ் படிக்க வைக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்,

  இதனால் சந்தியாவை விட்டு விலகி விலகி போகிறார். ஆனால் சந்தியாவோ எப்படியாவது சரவணன் உடன் வாழ வேண்டும் என முடிவில் இருக்கிறார். இதற்கிடையில் தான் நேற்றைய எபிசோடில் சந்தியாவும் சரவணனும் கோயிலுக்கு போன வழியில் போலீஸ் போல வேடமிட்டு மக்களை ஏமாற்றி வந்த மோசடி கும்பலை சந்தியா கையும் களவுமாக பிடித்து நிஜ போலீஸில் ஒப்படைக்கிறார்.அதன் தொடர்ச்சியாக  இன்றைய எபிசோடில் இருவரும் கோயிலுக்கு போய் சாமி கும்மிட்டு அந்த சம்பவத்தை பற்றி பேசினர். சந்தியாவின் துணிச்சலையும் தைரியத்தையும் சரவணன் பாராட்டினான்.

  அப்படியே அண்மையில் வைரலான துளசியைப் பற்றியும் இருவரும் பேசினர். குழந்தையை பேய் போல் அடித்து துன்புறுத்திய வீடியோவை பற்றி இருவரும் பேச, சரவணன் சந்தியாவின் அறிவை கண்டு மெய்சிலிர்க்கிறான். இதற்கிடையில் அர்ச்சனா , கோபமாக இருக்கும் தனது கணவரை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறாள். ஆனால் பலனில்லை. அர்ச்சனாவின் முயற்சி வீண் போனது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  பொழுது விடிய, சந்தியா தன் கையால் ஃபில்டர் காபி போட்டு எல்லோருக்கும் கொடுக்கிறார். அப்போது தான் செய்தித்தாள் வீட்டுக்கு வர சந்தியா, பார்வதி, மயிலு, சரவணன் மற்றும் அவரின் அப்பா ஆகியோர் செய்திகளை படிக்க, 3 ஆவது பக்கத்தில் சந்தியா - சரவணன் குறித்த செய்தி, தலைப்பு செய்தியாக இடம் பெற்றிருந்தது. சரவணனின் அப்பா , அதைப்பற்றி இருவரிடமும் கேட்க நடந்ததை சந்தியா கூறுகிறார். அவரின் செயலுக்கு பாராட்டும் தெரிவித்தார்.  இந்த நியூஸ் பேப்பர் குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் கண்களுக்கு தெரியாமல் இருக்க சந்தியா செய்தித்தாளை மறைக்கிறாள்.

  அப்போது வீடு தேடி வந்த தென்காசி இன்ஸ்பெக்டர், சந்தியாவை பாராட்டி கமிஷனர் உங்களை பார்க்க விரும்புகிறார் என்றும் தெரிவிக்கிறார். சந்தியா ஒருபக்கம் சந்தோஷப்பட்டாலும் மறுப்பக்கம் மாமியார் சிவகாமியை நினைத்து பய்ப்படுகிறார். ஆனால் மாறாக சிவகாமி அம்மாவோ சந்தியாவை போலீஸ் அதிகாரிகளுடன் சேர்ந்து முதன்முறையாக பாராட்டுகிறார். நாளுக்கு நாள் சந்தியாவை பற்றி பார்வை மாறிக்கொண்டே போகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sreeja Sreeja
  First published: