சினிமா துறையில் நடிக்கும் பலரும் தனது அழகு சார்ந்த விஷயத்தில் அதிக கவனம் செலுத்துவார்கள். எந்த விதத்திலும் தனது அழகை இழக்க கூடாது என்பதற்காக பல்வேறு முயற்சிகளை செய்து வருவார்கள். இது ஒரு புறம் இருக்க, தனது உடல் அழகையும் பாதுகாப்பாக பார்த்து கொள்வார்கள். குறிப்பாக ஜிம்மிற்கு செல்வது, சரியான உணவுகளை எடுத்து கொள்வது, மசில் பில்டிங் போன்றவற்றை பின்பற்றி வருவார்கள். இவற்றால் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள முடியும்.
அதன்படி, பல நடிகர் நடிகைகள் தாங்கள் எடுத்து கொள்ளும் உணவுகள் பற்றியும், ஜிம் ஒர்க் அவுட் பற்றியும் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை வெளியிடுவார்கள். இது அவர்களின் ஃபாலோவர்ஸ்களுக்கு மிக பெரிய உத்வேகத்தையும் தர கூடும். அந்த வகையில் சின்னத்திரை பிரபலங்களும் அவ்வப்போது தங்களின் ஜிம் ஒர்க் அவுட் சார்ந்த பதிவுகளை போஸ்ட் செய்து வருகின்றனர். விஜய் டிவியின் பிரபல தொடரான ராஜா ராணி சீசன் 2-ல் சந்தியா கதாபத்திரத்தில் தற்போது நடித்து வரும் ரியா விஸ்வநாதன் அவர்களும் தனது ஜிம் ஒர்க் அவுட் வீடியோவை பதிவிட்டு உள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் முதன்மையானது ராஜா ராணி 2 தொடர். இதில் சரவணன் கதாபத்திரத்தில் சித்து நடித்து வருக்கிறார். மறுபுறம் சந்தியாவாக ரியா என்பவர் நடித்து வருகிறார். இதற்கு முன்னர் விஜய் டிவி பிரபலம் ஆல்யா மானசா தான் இந்த பாத்திரத்தில் நடித்து வந்தார். அவருக்கு தற்போது இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதால் விடுப்பில் உள்ளார்.
இந்நிலையில் ஆல்யா மானசாவிற்கு பதிலாக நடிகை ரியா நடித்து வருகிறார். நடிகை ரியாவிற்கு இது தான் முதல் சீரியல். ராஜா ராணி தொடர் மூலம் தான் ஆல்யா மானசாவிற்கு அதிக ரசிகர்கள் உருவானார்கள். அதே போன்று ரியா இந்த சீரியலில் நடிக்க தொடங்கிய முதல் நாளில் இருந்தே, இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் உருவாக தொடங்கிவிட்டது. இவரின் தனித்துவமான மற்றும் அழகிய நடிப்பு பலருக்கும் பிடித்துள்ளது.
ஒரே நாள் ஒரே நேரத்தில் டிவி-யில் ஒளிபரப்பாகும் அஜித் - விஜய் திரைப்படங்கள்... டி.ஆர்.பி கிங் யாரு?
இவருக்கு சீரியலில் உள்ள ரசிகர்களை போலவே இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களிலும் பல ஃபாலோவர்ஸ் உள்ளனர். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்க கூடிய நடிகை ஆவார். அவ்வப்போது தனது மாடலிங் புகைப்படங்கள் மற்றும் ராஜா ராணி வீடியோக்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்போது இவர் தனது உடலை எப்படி கட்டுக்கோப்பாக வைத்து கொள்கிறார் என்பதற்கான ஒரு ஜிம் ஒர்க் அவுட் வீடியோவை பதிவிட்டு உள்ளார்.
நாம் இருவர் நமக்கு இருவர் தாமரையின் வளைகாப்பு நிகழ்ச்சி - அட்டகாச படங்கள்!
இந்த வீடியோவில் இவர் ஜிம்மில் தீவீரமாக ஒர்க் அவுட் செய்ய கூடிய பயிற்சிகளை காட்டி உள்ளார். இது பார்ப்பதற்ககு வெறித்தனமான ஒர்க் அவுட் வீடியோவாக உள்ளது. ரியாவின் ரசிகர்கள் இந்த வீடியோவை பார்த்து விட்டு தங்களது கருத்துக்களை கமெண்ட்ஸ் மூலம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோவிற்கு பலர் லைக்ஸ் செய்தும் வருகின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.