Home /News /entertainment /

சரவணன் தங்கச்சி பார்வதி உயிருக்கு ஆபத்து! ’ராஜா ராணி 2’வில் எதிர்பார்க்காத திருப்பம்!

சரவணன் தங்கச்சி பார்வதி உயிருக்கு ஆபத்து! ’ராஜா ராணி 2’வில் எதிர்பார்க்காத திருப்பம்!

ராஜா ராணி 2

ராஜா ராணி 2

ராஜா ராணி 2 வில் பார்வதியை அடித்து, கை கால்களை செல்வம் கட்டிப்போட்டு விடுகிறான்.

    ராஜா ராணி 2வில் கல்யாணம் முடிந்த பின்பும் பார்வதிக்கு நிம்மதி இல்லை. அம்மா வீட்டுக்கு கணவர் பாஸ்கருடன் வந்த பார்வதியின் உயிருக்கு இப்போது ஆபத்து.

    ராஜா ராணி 2 சீரியலில் போன வாரம் முழுவதும் பார்வதியின் கல்யாண எபிசோடுகள் பரபரப்பாக ஒளிப்பரப்பாகியது.  பார்வதி காதலிக்கும் போது எடுத்த ஃபோட்டோவை வைத்து  விக்கி, பார்வதியை மிரட்டி வந்தான். இதற்கு பார்வதியின் அண்ணி அர்ச்சனாவும் துணை. அதாவது எப்படியாவது பாஸ்கர், பார்வதி திருமணத்தை நிறுத்திவிட்டு அவரின் தங்கைக்கு பாஸ்கருடன் திருமணம் செய்து வைக்க வேண்டும் என நினைக்கிறார். அதற்காக விக்கிக்கு எல்லா விதத்திலும் உதவி செய்கிறார்.

    cook with comali : ரசிகர்கள், போட்டியாளர்களுக்கு காத்திருக்கும் மிகப் பெரிய சர்ப்பிரைஸ்!

    ஆனால் கடைசி நேரத்தில் சந்தியா மொத்த கதையும் மாற்றிவிட்டார். விக்கி, கல்யாண மண்டபத்திற்கு வந்து பார்வதியை அனைவரின் முன்பு அசிங்கப்படுத்த, பதிலுக்கு சந்தியா விக்கிக்கு தகுந்த பதிலடி கொடுத்து போலீஸில் பிடித்துக் கொடுக்கிறார். பாஸ்கர் குடும்பத்தினருக்கு எல்லா உண்மைகளையும் சந்தியா முன்னாடியே சொல்லி விட்டார். இதனால் எந்த பிரச்சனையும் இல்லாமல் பார்வதி - பாஸ்கர் கல்யாணம் நடந்து முடிந்தது. அர்ச்சனா நினைத்த எதுவே கடைசி வரை நடக்கவில்லை. இந்நிலையில் இன்றைய எபிசோடில் பார்வதியும் பாஸ்கரும் மறுவீடு சடங்குக்காக சரவணன் வீட்டுக்கு வருகின்றனர்.

    இவர்களுக்கு வீட்டில் விருந்து சமையல் ரெடியாகிறது. இந்த நேரத்தில் தான் சரவணன் கடையில் வேலைப்பார்த்து வரும் செல்வத்தின் உண்மையான முகம் தெரிய வருகிறது. செல்வம், ஒரு தீவிரவாதி . மக்களோடு மக்களாக  சேர்ந்து ஊரில் அசம்பாவிதம் ஏற்படுத்த சரவணன் கடைசியில் வேலைக்கு சேர்ந்து நல்லவன் போல் நடிக்கிறான். இன்றைய எபிசோடில் அர்ச்சனா அவனிடம் இருக்கும்  பாஸ்போர்டை பார்த்து விடுகிறார். ஆனால் அர்ச்சனாவிடமிருந்து  செல்வம் எஸ்கேப் ஆகிவிடுகிறான்.

    வெள்ளித்திரையில் டானாக உயர்ந்து நிற்கும் சிவகார்த்திகேயன்!

    இந்நிலையில், சரவணனை பார்க்க கடைக்கு போகும் பார்வதி, செல்வம் ஃபோனில் பேசுவதை கேட்டு விடுகிறார். உடனே பார்வதியை அடித்து, கை கால்களை செல்வம் கட்டிப்போட்டு விடுகிறான். அங்கு மொத்த குடும்பமும் பார்வதிக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த ட்விஸ்டுடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது. பார்வதிக்கு அடுத்து என்ன ஆகும்? சந்தியா பார்வதியை எப்படி காப்பாற்றுவார்? என்பதுஅடுத்த வார எபிசோடில் தெரிய வரும்.,



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி