ராஜா ராணி 2 சீரியலில் பார்வதி என்ற ரோலில் நடிப்பவர் தான் சின்னத்திரை நடிகை வைஷூ சுந்தர். இவர் டிக் டாக் வீடியோ மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். பின்பு நடிகை ஆக வேண்டும் என்ற கனவோடு, மீடியாவுக்குள் நுழைந்தார். சின்னத்திரை அவருக்கு மிகப் பெரியவரவேற்பு கொடுத்தது. ராஜா ராணி 2வுக்கு முன்பு சன் டிவியில் ஒளிப்பரப்பான 'ரன்' என்ற தொடரின் மூலம் சீரியலில் அறிமுகமானார். அதன் பின்பு தான் அவருக்கு ராஜா ராணி சீரியல் வாய்ப்பு கிடைத்தது. சில ஆல்பம் பாடல்களிலும் நடித்துள்ளார்.
இவருக்கு இதே வேலை தான்.. பிரபல சீரியல் நடிகையை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்! ஏன்?
நடிப்பு ஒருபுறம் இருக்க, இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார். அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தன்னுடைய நடிப்பு பயணம் குறித்து அண்மையில் பகிர்ந்து கொண்டார் வைஷூ. அதில், " சொந்த ஊர் ஆந்திர மாநிலம் திருப்பதி. பிசியோதெரபி படித்தாலும் சினிமா மீது எனக்கு ஆசை இருந்தது. அம்மா தமிழ் டீச்சர் என்பதால், படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என கண்டிப்பாக கூறிவிட்டார். எனக்கு இருந்த நடிப்பு ஆசை காரணமாக, டிக்டாக்கில் தொடர்ந்து வீடியோ பதிவிட தொடங்கினேன். 12வது படிக்கும்போதே டிக்டாக்கில் வீடியோ பதிவிட்டு வந்தேன்” என்றார்.
’ராஜா ராணி 2’ சீரியல் நடிகைக்கு திருமணம் ஆகிவிட்டது! உங்களுக்கு தெரியுமா?
சின்னத்திரைக்குள் காலடி எடுத்து வைத்த கொஞ்ச நாளிலே பலரின் கவனத்தையும் பெற்றுள்ள இவருக்கு சீரியலிலும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் முழுவதும் பார்வதி - விக்கி திருமணம் எபிசோடுகள் டி.ஆர்.பியை கலக்கின. கடைசியில் பல பிரச்சனைகளுக்கு பின்பு பார்வதி கல்யாணம், பாஸ்கருடன் முடிந்தது. இப்படி இருக்கையில் தற்போது சீரியலில் பார்வதி தீவிரவாதி செல்வத்தால் கடத்தப்பட்டு விட்டார். அவரை காப்பாற்ற சந்தியா பல முயற்சிகளை எடுத்து வருகிறார். இதுத்தொடர்பான திரைக்கதை பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், பார்வதியாக நடிக்கும் வைஷூ சொந்தமாக கார் வாங்கியுள்ளார். விஜய் டிவியில் பிரபலங்கள் தொடர்ந்து கார் வாங்கி வரும் நிலையில், அந்த லிஸ்டில் அடுத்து சேர்ந்து இருப்பவர் தான் ராஜா ராணி 2 பார்வதி. இவர், ஸ்கோடா நிறுவனத்தின் காரை சமீபத்தில் வாங்கியுள்ளார். இதன் விலை ரு. 13 லட்சம் என்றும் கூறப்படுகிறது. கார் வாங்கும் வீடியோவை மிகுந்த மகிழ்ச்சியுடன் வைஷூ தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.