• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • படம் பார்க்க வந்த தியேட்டரில் மாட்டி கொண்ட ராஜா ராணி அர்ச்சனா!

படம் பார்க்க வந்த தியேட்டரில் மாட்டி கொண்ட ராஜா ராணி அர்ச்சனா!

ராஜா ரானி அர்ச்சனா

ராஜா ரானி அர்ச்சனா

இருவரும் வீட்டுக்கு தெரியாமல் படம் பார்க்க வந்தனர். இந்த நேரம் பார்த்து செந்தில் அப்பாவும் அதே தியேட்டருக்கு படம் பார்க்க வருகிறார்

  • Share this:
    மாமியாருக்கு தெரியாமல் தியேட்டரில் படம் பார்க்க வந்த அர்ச்சனாவும் செந்திலும் கையும் களவுமாக மாட்டிக் கொண்டார்கள்.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ராஜா ராணி 2 சீரியல் விறுவிறுப்பான கதைக்களத்துடன் சென்று கொண்டிருக்கிறது. சந்தியாவை விட்டு பிரிய நினைத்த சரவணன், இப்போது சந்தியாவின் அன்பை புரிந்து கொண்டு அவளுடன் சேர்ந்து வாழ முடிவு எடுத்துவிட்டான். சிவகாமியும் சந்தியாவை நல்ல மருமகள் என ஏற்றுக் கொண்டார். வழக்கம் போல் அர்ச்சனா மட்டும் பொறாமையில் வெந்து சாகிறாள். இதற்கிடையில் சரவணன் தங்கை பார்வதி கல்யாணமும் உறுதியாகிவிட்டது. ஆனால் சந்தியாவின் ஐபிஎஸ் கனவு மட்டும் பாதியிலே நிற்கிறது. சரவணன் , சந்தியாவின் ஆசையை நிறைவேற்ற வீட்டுக்கு தெரியாமல் சந்தியாவை ஐபிஎஸ் படிக்க வைப்பது தான் அடுத்தடுத்து வர போகும் ட்விஸ்டுகள்.

    இந்தி சீரியலின் ரீமேக்காக ஒளிப்பரப்பாகும் ராஜா ராணி 2 சீரியல் ஆரம்பத்தில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. ஆனால் ஆல்யா மானசாவின் நடிப்பும் சரவணன் ஆக நடிக்கும் சித்துவின் நடிப்பும் ரசிகர்களை கட்டி போட்டு விட்டது. இதனால் இந்த சீரியல் தற்போது டி.ஆர்.பியில் நல்ல ரேட்டிங்கில் ஒளிப்பரப்பாகி வருகிரது. விஜய் டிவியில் முன்னணி இயக்குனர் பிரவீன் தான் இந்த சீரியலின் இயக்குனர். அண்மையில் கூட சந்தியா - சரவணன் சேருவதற்கு காரணமான பேருந்து விபத்து சீனை தத்ரூபமாக காட்சிபடுத்தி இருந்தார் இயக்குனர். இந்த சீனை சீரியலில் பார்த்த ரசிகர்கள் சந்தியா சரவணன் நடிப்பு மற்றும் விபத்து காட்சிப்படுத்திருந்த விதத்தை பாராட்டி இருந்தனர்.

    இந்நிலையில் சீரியல் இப்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் சென்று கொண்டிருக்கிறது. நேற்றைய தினம் மாமியார் மற்றும் குடும்பத்தினரிடம் அர்ச்சனாவும் செந்திலும் புடவை டெலிவரி செய்ய போவதாக கூறி வீட்டை விட்டு கிளம்பினர். ஆனால் அவர்கள் இருவரும் வீட்டுக்கு தெரியாமல் படம் பார்க்க வந்தனர். இந்த நேரம் பார்த்து செந்தில் அப்பாவும் அதே தியேட்டருக்கு படம் பார்க்க வருகிறார். தனக்கு முன்னாடி இருக்கும் சீட்டில் செந்திலும் - அர்ச்சனாவும் படம் பார்ப்பதை பார்த்து விட்ட அவர், கண்டுக்கொள்ளாது போல் இருக்கிறார்.



    இடைவெளி நேரத்தில் ஸ்நாக்ஸ் வாங்கி சாப்பிட்ட சென்ற அவரை, செந்திலும் அர்ச்சனாவும் பார்த்து விடுகிறார்கள். இவரிடம் மாட்டிக் கொண்டால் சிவகாமியிடம் சொல்லி விடுவார் என செந்திலும் அர்ச்சனாவும் பயந்து பயந்து மறைகிறார்கள். ஆனால் அவர் ஏற்கெனவே இருவரையும் பார்த்து விட்டார் என்ற விஷயம் அவர்களுக்கு தெரியாது. அடுத்தது என்ன நடக்கும் என்பது இன்றைய எபிசோடில் தெரிந்து விடும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: