Home /News /entertainment /

1 கோடி போச்சு.. அதிர்ச்சியில் ராஜா ராணி 2 அர்ச்சனா!

1 கோடி போச்சு.. அதிர்ச்சியில் ராஜா ராணி 2 அர்ச்சனா!

ராஜா ராணி 2 அர்ச்சனா

ராஜா ராணி 2 அர்ச்சனா

அர்ச்சனாவுக்கு அதிர்ச்சி தாங்கவில்லை 1 கோடி மதிப்புள்ள  நகையும் சாம்பல் ஆகிவிட்டதாக நினைத்து கதறுகிறார்.

    ராஜா ராணி 2 வில் கோயில் நகைகளை வறட்டியில் மறைத்து வைத்திருந்த அர்ச்சனா சந்தியாவிடம் மாட்டிக் கொண்டார். அர்ச்சனாவின் 1 கோடி ஆசை வெறும் ஆசையாகவே போய் விட்டது.

    ராஜா ராணி 2 சீரியல் இந்த வாரம் மகா சங்கமம் எபிசோடாக  ஒளிப்பரப்பாகி வருகிறது. பாரதி கண்ணம்மா - ராஜா ராணி தொடர்கள்  இணைந்து சிறப்பு 1 மணி நேர நிகழ்ச்சியாக டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. பாரதியும் கண்ணம்மாவும் குழந்தைகளுடன் இப்போது சிவகாமி வீட்டில் தங்கியுள்ளனர். ஏற்கெனவே சிவகாமி குடும்பம் சாமியார் பிரச்சனையில் சிக்கி இருக்க, அந்த பிரச்சனையில் இருந்து சந்தியா - சரவணனை வெளியே கொண்டு வர  கண்ணமாவும் பாரதியும்  உதவுகின்றனர்.

    மீண்டும் ராதிகாவுடன் சேர நினைக்கும் கோபி.. பாக்கியா எடுக்க போகும் முடிவு என்ன?

    இந்நிலையில், கோயில் நகை காணாமல் போகிறது. 1 கோடி மதிப்புள்ள  நகைகளை அர்ச்சனா தான் திருடி அதை சாணியில் முக்கி வறட்டியாக தட்டி வைக்கிறார். இந்த விஷயம் தெரியாமல் நகையை எடுத்த பழி சிவகாமி அம்மா குடும்பத்தின் மீது விழுகிறது. இதற்கெல்லாம் காரணம் சந்தியா கோயில் கட்ட கூடாது என்று கோர்டில் வழக்கு தொடர்ந்தது தான் என சண்டை போடுகிறார் சிவகாமி.

    வாணியை காப்பாற்ற வரும் வெண்ணிலா.. சீரியல் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!

    இந்நிலையில் இன்றைய எபிசோடில் குழந்தைகளுக்கு சுட தண்ணீர் போட சந்தியாவும் கண்ணம்மாவும் அடுப்பை தயார் செய்கின்றனர். அப்போது வறட்டியை எடுத்து அடுப்பில் வைக்கின்றனர். வறட்டியில்  சாமி நகைகள் இருப்பதை பார்த்து ஷாக் ஆகுகின்றனர். இந்த கேவலமான வேலையை அர்ச்சனா தான் செய்து இருப்பார் என கண்டுப்பிடிக்கிறார் சந்தியா. ஆனாலும், அதை பற்றி அர்ச்சனாவிடம் கேட்காமல் நகைகளை மட்டும் எடுத்து விடுகிறார்.



    சிறிது நேரம் கழித்து வறட்டியை காணவில்லை என அர்ச்சனா தேடுகிறார். அப்போது தான் மயிலு வறட்டியை அடுப்பில் எரித்து விட்டதாக கூறுகிறார். அர்ச்சனாவுக்கு அதிர்ச்சி தாங்கவில்லை 1 கோடி மதிப்புள்ள  நகையும் சாம்பல் ஆகிவிட்டதாக நினைத்து கதறுகிறார். அதை செந்தில் பார்த்து விடுகிறார். ஆனால் அர்ச்சனா கர்ப்பமாக இருப்பதால் சாம்பல் சாப்பிட அசைப்படுகிறார் என செந்தில்  தவறாக நினைத்துக் கொள்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Television, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி