இன்ஸ்டாகிராமில் போலி அக்கவுண்ட்... ரசிகர்களை உஷார்படுத்திய சீரியல் நடிகர் சித்து

இன்ஸ்டாகிராமில் போலி அக்கவுண்ட்... ரசிகர்களை உஷார்படுத்திய சீரியல் நடிகர் சித்து

நடிகர் சித்து

இன்ஸ்டாகிராமில் தனது மேனேஜர் என்ற பெயரில் உலவும் போலியான இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை ரசிகர்களிடம் கூறி உஷார்படுத்தியுள்ளார் சீரியல் நடிகர் சித்து.

  • Share this:
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமணம்’ தொடரில் நடித்து பிரபலமானவர்கள் சித்து - ஸ்ரேயா ஜோடி. இத்தொடரில் இவர்களுக்கிடையேயான காதல் காட்சிகளுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. சீரியலைத் தாண்டி உண்மையிலும் இவர்கள் காதலர்களாகவே வலம் வருகின்றனர்.

திருமணம் சீரியலைத் தொடர்ந்து விஜய் டிவியின் ராஜா ராணி 2-ல் நடிக்கிறார் சித்து. இதில் அவருக்கு ஜோடியாக ஆல்யா மானஷா நடிக்கிறார். இத்தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் சித்து தனது உதவியாளர் என்ற பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு இருப்பதை எடுத்துக் கூறி ரசிகர்களை உஷார்படுத்தியுள்ளார்.

போலியான அக்கவுண்டை புகைப்படமாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் பதிவிட்டிருக்கும் சித்து,  “மேனேஜரா ராஜா யாருமா நீ. எனக்கே உன்ன பார்க்கணும் போல இருக்கு” என்று நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் இருக்கும் பிரபலங்களின் பெயரைப் பயன்படுத்தி பல்வேறு போலி கணக்குகள் உருவாக்கப்படுகின்றன. அதனால் சில சமயங்களில் மோசடி உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதும் வாடிக்கையாகி வருகிறது. எனவே ஒரு சில நடிகர்கள் தங்களது பெயரில் உலா வரும் போலியான சமூகவலைதள பக்கங்களை ரசிகர்களுக்கு தெரிவித்து எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தியும் வருகின்றனர்.
Published by:Sheik Hanifah
First published: