Home /News /entertainment /

என் விலகலுக்கு இதுதான் காரணம்.. ராஜா ராணி 2 அர்ச்சனா கொடுத்த விளக்கம்!

என் விலகலுக்கு இதுதான் காரணம்.. ராஜா ராணி 2 அர்ச்சனா கொடுத்த விளக்கம்!

ராஜா ராணி அர்ச்சனா

ராஜா ராணி அர்ச்சனா

அர்ச்சனா சீரியலில் இருந்து விலகி விட்டார் என்ற தகவல் வெளியாகி இருந்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ராஜா ராணி 2 சீரியலில் இருந்து அர்ச்சனா திடீரென்று விலகி இருப்பது அவரின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படி இருக்கையில் இதுக் குறித்து விளக்கம் அளித்துள்ளார் அர்ச்சனா.

    முதல் சீரியலே அர்ச்சனாவுக்கு மிகப் பெரிய பெயரையும் புகழையும் விருதையும் வாங்கி குவித்துள்ளது. நெகடிவ் ரோல் என்றாலும் தனது வித்தியாசமான நடிப்பால் மக்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார் அர்ச்சனா. இதற்கு முன்பு சன் டிவி , ஆதித்யா, லோக்கல் சேனல்களில் ஆங்கராகவும் பணிப்புரிந்து இருக்கிறார். விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும்  நீயா நானா நிகழ்ச்சியில் ஆடியன்ஸாக கலந்து கொண்டு இணையத்திலும் வைரலானார். ராஜா ராணி 2 வில் ஆல்யாவுக்கு பிறகு பலரும் அர்ச்சனாவை விரும்பினர். ஆல்யா சென்றதுக்கு பிறகும் அர்ச்சனாவின் வில்லத்தனத்தால் ரசிகர்கள் விடாமல் சீரியலை பார்த்து வந்தனர். இப்படி இருக்கையில் நேற்றைய தினம் அர்ச்சனா சீரியலில் இருந்து விலகி விட்டார் என்ற தகவல் வெளியாகி இருந்தது.

    பாரதி கண்ணம்மா சீரியலில் கெஸ்ட் ரோலில் நடிக்க வரும் நடிகர்!

    அதுமட்டுமில்லை இவருக்கு பதில் இனி ஈரமான ரோஜாவே அர்ச்சனா குமார், ராஜா ராணி 2 வில் நடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது. அர்ச்சனாவின் விலகலுக்கு என்ன காரணம் என தெரியாமல் ரசிகர்கள் குழம்பி போயினர், பலரும் இது வதந்தியாக இருக்கும் எனவும் நினைத்தனர். ஆனால் கடைசியில் இது உண்மைதான் என அர்ச்சனா உறுதி செய்துள்ளார். அதுமட்டுமில்லை தனது ரசிகர்களுக்கு அதற்கான காரணத்தையும் அர்ச்சனா கூறியுள்ளார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Archana R (@vj_archana_)






    இதுக் குறித்து அவர் வெளியிட்டுள்ளா இன்ஸ்டா பதிவில், “தினசரி வாழ்க்கை நமக்கு தினமும் புது புது ஆச்சரியத்தை தரும். இப்போது நான் அடுத்தக்கட்டத்திற்கான திட்டமிடலை தொடங்குவதற்காக திட்டமிட்டு இருக்கேன். அதற்கான நேரமும் வந்துவிட்டது. கண்டிப்பாக ராஜா ராணி 2 குழுவை மிஸ் செய்வேன். எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த ஒட்டுமொத்த டீமிற்கும் நன்றி. இன்றைக்கு வரைக்கும் எனக்கு அன்பையும், ஆதரவையும் தரும் ரசிகர்களாகிய உங்களுக்கும் நன்றி.  அனைவரையும் என் புது பரிமாணத்தில் சந்திக்கிறேன்” என கூறியுள்ளார்.

    புது பரிமாணம் என்றால் வெள்ளித்திரையா? என ரசிகர்கள் அர்ச்சனாவிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி