ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

போதும் விஜய் டிவி.. ஜீ தமிழ் பக்கம் சென்ற நடிகை! என்ன காரணம்?

போதும் விஜய் டிவி.. ஜீ தமிழ் பக்கம் சென்ற நடிகை! என்ன காரணம்?

சீரியல் நடிகை ஆர்த்தி ராம்குமார்

சீரியல் நடிகை ஆர்த்தி ராம்குமார்

சீரியல் நடிகை ஆர்த்தி ராம் வித்தியாசமான லுக்கில் சத்யா சீரியலில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :

  சன் டிவி மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்படும் சீரியலாக இருக்கிறது. அதனை தாண்டி, மக்களிடையே பிரபலமடையும் சில தொலைக்காட்சி சீரியல்கள் என்றால் அவை ஜீதமிழ் சீரியல்களாக இருக்கும். இந்த சேனலில் ஒளிபரப்பட்டு வரும் பல ஹிட் சீரியல்களில் ஒன்று தான் சத்யா. ரவுடி பேபி சத்யா என்றால் சின்னத்திரை ரசிகர்கள் உற்சாகம் அடைந்து விடுவார்கள். அந்த அளவுக்கு ஜீ தமிழில் ஒளிப்பரப்பான சத்யா சீரியல் ரசிகர்களை ஈர்த்து இருந்தது.

  முதல் டாம் கேர்ள் ஹீரோயின் ரோலில் நடிகை ஆயிஷா சென்னை பாஷையில் கலக்கி இருப்பார். இந்த சீரியல் திடீரென்று முடிக்கப்பட்டதும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து அதிருப்தியை வெளிப்படுத்தினர். அவர்களை சமாதானம் செய்ய சத்யா 2 சீரியலை சீரியல் குழு உடனே டெலிகாஸ்டுக்கு கொண்டு வந்தது. தற்போது, இந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது, இந்த சீரியலில் புதிதாக ஒரு பிரபலம் என்ட்ரி கொடுத்துள்ளார்.

  இதையும் படிங்க.. ரசிகர்களுக்கு அருண் விஜய் கொடுக்க போகும் ட்ரீட் யானை டீசர்!

  அவர் தான் சின்னத்திரை நடிகை ஆர்த்தி ராம். இவர் விஜய் தொலைக்காட்சியில் புதியதாக தொடங்கப்பட்ட ராஜபார்வை சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார். இந்த சீரியல் சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது. மேலும் இவர் அதே தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி என்ற தொடரிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் இவர் மிகவும் வித்தியாசமான லுக்கில் சத்யா சீரியலில் நடிக்க கமிட்டாகியுள்ளார். அதனை உறுதிபடுத்தும் விதமாக சீரியல் நாயகன் விஷ்ணுவுடன், ஆர்த்தி ராம் எடுத்த புகைப்படம் இப்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

  இதையும் படிங்க.. வானத்தை போல சின்ராசுவாக நடிக்க போவது இவர் தான்! வெளியானது முக்கிய அப்டேட்!

  ஆர்த்திராம், சின்னத்திரை மட்டுமல்லாது, வெள்ளித்திரையிலும் பல படங்களில் நடித்துள்ளார். கிரி, குட்டி, படிக்காதவன் உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார். தவிர, இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த சண்டிமுனி, என்ன தவம் செய்தேனோ உள்ளிட்ட பல படங்கள் இவருக்கு ஓரளவு கை கொடுத்தது. இந்த நிலையில் விஜய் டிவி தொலைக்காட்சி சீரியலில் இருந்து தற்போது ஜீ தமிழுக்கு மாறியுள்ளார். டிஆர்பி வரிசையில் முன்னிலையில் இருக்கும் சீரியல்கள் பட்டியலில் சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்கள் தான் இடம் பிடித்திருக்கும்.

  ஆர்த்தி ராம்

  அதிலும், இத்தனை நாட்கள் ரோஜா மற்றும் பாரதி கண்ணம்மா சீரியல்கள் தான் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலையில் அதிகம் வந்தன. இப்போது கடந்த சில வாரங்களாக சன் டிவியில் தொடங்கப்பட்டுள்ள புதிய சீரியலான கயல் முதல் இடத்தை பிடித்து வருகிறது. மேலும், சன் டிவி மற்றும் விஜய் டிவி தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் சின்னத்திரை பிரபலங்கள் மறுப்பு தெரிவிப்பதில்லை. ஏனெனில் ரசிகர்கள் மனதில் எளிதில் இடம் பிடித்துவிடலாம்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: TV Serial, Vijay tv, Zee tamil