Home /News /entertainment /

பிரபல சீரியல் நடிகருக்கு காதல் தோல்வி? ஆறுதல் சொன்ன ரசிகர்கள்!

பிரபல சீரியல் நடிகருக்கு காதல் தோல்வி? ஆறுதல் சொன்ன ரசிகர்கள்!

ராகவேந்திரன் புலி

ராகவேந்திரன் புலி

”அதை நம்பி என் குடும்பத்தை கஷ்டப்படுத்த விரும்பவில்லை.”

    காற்றுக்கென்ன வேலி சீரியலில் மாறன் ரோலில் நடித்த ராகவேந்திரன் புலி காதல் தோல்வி குறித்து இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கனா காணும் காலங்கள் தொடர் மூலம் சின்னத்திரைக்கு ஏராளமான புதுமுக நடிகர், நடிகைகள் கிடைத்தனர். அதில் ஒருவர் தான் ராகவேந்திரன். இவர் கனா காணும் சீரியலில் புலி என்ற ரோலில் நடித்து பிரபலமானார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'காற்றுக்கென்ன வேலி' தொடரில் நடித்துக் கொண்டிருந்தவர், சில மாதங்களுக்கு முன்பு அந்தத் தொடரில் இருந்து விலகுவதாகவும், மீடியாவை விட்டு விலகப் போவதாகவும் அறிவித்திருந்தார். காற்றுக்கென்ன வேலி தொடரில் மாறன் என்ற ரோலில் வெண்ணிலாவின் நண்பராக ராகவேந்திரன் நடித்து வந்தார்.

    அவருக்கு வேற கல்யாணம் ஆயிடுச்சு.. சர்ச்சைக்கு பதில் சொன்ன பிக் பாஸ் இசைவாணி!

    அதன் பின்பு சம்பள குறைவு, கதையில் முக்கியத்துவம் இல்லை என பல காரணங்களை குறிப்பிட்டு சீரியலில் இருந்து விலகினார். சமீபத்தில் பிரபல் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருந்த இவர், தண்ணீர் கேன் போடும் வேலையை செய்து கொண்டிருப்பதாக கூறியிருந்தார். சினிமா என்னை வாழ வைக்கும் என்று நினைத்தேன், ஆனால் அதை நம்பி என் குடும்பத்தை கஷ்டப்படுத்த விரும்பவில்லை. அவர்களுக்காகவும் குடும்பத்தை காப்பாற்றவும் வேலைக்கு செல்கிறேன் என்று கூறியிருந்தார்.

    பிக் பாஸ் ஓவியாவின் திடீர் முடிவு.. ரசிகர்கள் செம்ம ஹேப்பி!

    இந்நிலையில் ராகவேந்திரன் தனது இன்ஸ்டா பக்கத்தில் கையில் ட்ரிப்ஸ் ஏற்றியப்படி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஒருதலைக்காதல் தோல்வி என்பது போல் கேப்ஷன் கொடுத்து இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.




    அந்த வீடியோவில் ராகவேந்திரன் குறிப்பிட்டிருப்பதாவது, “ , "ஒரே ஒரு ஒன் சைடு லவ். மொத்த பாடி க்ளோஸ். மன அழுத்தத்தால் மொத்த உடமும் டேமேஜ் , நல்லா இருமா என்னா கொடுமைடா" என தெரிவித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி “GET WELL SOON” என கமெண்ட் செய்து வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Television, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி