ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Radikaa Sarathkumar: சன் டிவி இல்லை... வேறு சேனலில் புதிய சீரியலை தொடங்கும் ராதிகா?

Radikaa Sarathkumar: சன் டிவி இல்லை... வேறு சேனலில் புதிய சீரியலை தொடங்கும் ராதிகா?

ராதிகா சரத்குமார்

ராதிகா சரத்குமார்

இனி சீரியல்களில் நடிக்க போவதில்லை என்று அறிவித்த ராதிகா, சித்தி 2-வில் இருந்து விலகி தற்போது படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

நடிகை ராதிகா சரத்குமார் வேறொரு சேனலில் புதிய சீரியலை தயாரிக்கவிருப்பதாகவும் அதில் சிறப்புத்தோற்றத்தில் அவர் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குநர் பாரதிராஜா இயக்கிய கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் பாஞ்சாலி எனும் கதாபாத்திரத்தில், அப்பாவி கிராமத்து பெண்ணாக அறிமுகமான ராதிகா, 80 மற்றும் 90-களில் தொடர்ந்து முன்னணி நடிகையாக நடித்தார். தனது சிறந்த நடிப்புக்காக ஃபிலிம்பேர் விருது மற்றும் தமிழகத்தின் மாநில விருதுகளையும் வென்றார்.

சினிமாவில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும் போதே, தொலைக்காட்சியிலும் எண்ட்ரியானார். சினிமாவிலும், சின்னத்திரையில் முன்னணி இடத்தைப் பிடிப்பது மட்டுமல்ல, அதை தொடர்ந்து தக்க வைக்கவும் முடியும் என்பதில் நடிகை ராதிகா மற்றவர்களுக்கு உதாரணமாக திகழ்ந்தார்.

த்ரிஷாவை பேட்டி எடுத்த அஞ்சலி... வைரலாகும் சுவாரஸ்யமான விஷயம்!

சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, சித்தி, செல்வி, அண்ணாமலை, செல்லமே, வாணி ராணி, சித்தி 2 என பல சீரியல்களை தயாரித்து அதில் தானே நடிக்கவும் செய்தார். இதற்கிடையே இனி சீரியல்களில் நடிக்க போவதில்லை என்று அறிவித்த அவர், சித்தி 2-வில் இருந்து விலகி தற்போது படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

Trisha Krishanan: விஜய்-அஜித்துடன் தலா 4 படங்களில் நடித்த த்ரிஷா... உங்களுக்குப் பிடித்தது எது?

இந்நிலையில் கலைஞர் டிவி-யில் புதிதாக சீரியல் ஒன்றை தயாரிக்கவிருக்கிறாராம் ராதிகா. பொன்னி எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த சீரியலில் சிறப்புத் தோற்றத்திலும் நடிக்கவிருக்கிறாராம். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Radhika sarathkumar