• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • விஜய் டிவி-க்கு என்ன தான் ஆச்சு? நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலுக்கு ’பை’ சொன்ன ரச்சிதா

விஜய் டிவி-க்கு என்ன தான் ஆச்சு? நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலுக்கு ’பை’ சொன்ன ரச்சிதா

ரச்சிதா மகாலட்சுமி

ரச்சிதா மகாலட்சுமி

நடிகை ரச்சிதா மகாலட்சுமி, கன்னட படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியிருப்பதாகவும் அதனால் அவர் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலை விட்டு விலகவிருப்பதாகவும் சில மாதங்கள் முன்பு செய்திகள் வெளியாகின.

  • Share this:
    நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்து விலகியிருக்கிறார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.

    விஜய் டிவி-யில் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் பாகத்தில் மிர்ச்சி செந்தில், ரக்‌ஷா ஹொல்லா, ராஷ்மி ஜெயராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

    ஆனால் கடந்தாண்டு கொரோனா சூழலால் மற்ற சீரியல்களின் படப்பிடிப்பில் ஏற்பட்ட தடையைப் போலவே நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் படப்பிடிப்பும் தடைப்பட்டது. பின்னர் படப்பிடிப்புக்கு அரசு அனுமதியளித்த பின்னரும், வெளி மாநிலங்களில் இருந்து ராஷ்மியும், ரக்‌ஷாவும் வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

    இதையடுத்து ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலின் முதல் பாகம் நிறுத்தப்பட்டு, இரண்டாம் பாகம் ஒளிபரப்பப்பட்டது. முதல் பாகத்தைப் போலவே இதிலும் மிர்ச்சி செந்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘சரவணன் மீனாட்சி’ புகழ் ரச்சிதா மகாலட்சுமி நடித்து வந்தார்.

    இதற்கிடையே ரச்சிதா, கன்னட படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியிருப்பதாகவும் அதனால் அவர் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலை விட்டு விலகவிருப்பதாகவும் சில மாதங்கள் முன்பு செய்திகள் வெளியாகின.

    இதற்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலளித்த ரச்சிதா, ”சில வதந்திகளுக்காக நான் 'நாம் இருவர் நமக்கு இருவர்' தொடரில் இருந்து விலகியதாக சொல்ல முடியாது. போற வரைக்கும் போவோம்! தானா ஸ்டாப் ஆச்சுன்னா பார்த்துக்கலாம். அதுவரைக்கும் என்னை கொஞ்சம் ஃப்ரீயா விடுங்க! இதை ஒரு பெரிய செய்தியாக்குறதுனால எந்த பயனும் இல்ல. 'நாம் இருவர் நமக்கு இருவர்' விட்டு போறேன்... போறேன்னு சொல்லி சொல்லி என்னை நீங்களே போக வைச்சிடுவீங்க போலயே” எனக் குறிப்பிட்டுருந்தார்.

    Rachitha Mahalakshmi quits vijay TV Naam Iruvar Namakku Iruvar serial, Naam Iruvar Namakku Iruvar Rachitha Mahalakshmi, rachitha mahalakshmi Kannada movie pictures, Vijay TV Naam Iruvar Namakku Iruvar rachitha mahalakshmi hot photos, naam iruvar namakku iruvar, rachitha mahalakshmi hot, vijay tv rachitha, vijay tv naam iruvar namakku iruvar serial, naam iruvar namakku iruvar sasindhar, naam iruvar namakku iruvar serial today, naam iruvar namakku iruvar serial today episode, naam iruvar namakku iruvar hotstar, விஜய் டிவி நாம் இருவர் நமக்கு இருவர், நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல், நாம் இருவர் நமக்கு இருவர் இன்று, நாம் இருவர் நமக்கு இருவர் ப்ரோமோ, நாம் இருவர் நமக்கு இருவர் ஹாட்ஸ்டார், நாம் இருவர் நமக்கு இருவர் ரச்சிதா, விஜய் டிவி ரச்சிதா, நாம் இருவர் நமக்கு இருவர் மகா
    ரச்சிதா மகாலட்சுமி


    இதற்கிடையே தற்போது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ தோற்றத்தின் புகைப்படத்தை பதிவிட்டு, ’பை மஹா’ எனத் தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: