Home /News /entertainment /

என்னாச்சு? ஷாக்கில் ரசிகர்கள்.. முடிவுக்கு வரும் ரச்சிதாவின் சீரியல்!

என்னாச்சு? ஷாக்கில் ரசிகர்கள்.. முடிவுக்கு வரும் ரச்சிதாவின் சீரியல்!

ரச்சித்தா மகாலட்சுமி

ரச்சித்தா மகாலட்சுமி

சீரியல் தொடங்கி 1 வருடம் கூட முழுமையாக முடியாத நிலையில் அதற்குள் சீரியலை முடிக்க என்ன காரணம்?

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சின்னத்திரை நடிகை ரச்சிதா கலர்ஸ் தமிழில் நடித்து வரும் ‘இது சொல்ல மறந்த கதை’ சீரியல் விரைவில் முடிய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சின்னத்திரையில் நாள் ஒன்றுக்கு 50க்கும் மேற்பட்ட சீரியல்கள் வெவ்வேறு சேனல்களில் ஒளிப்பரப்பாகி வருகின்றன. சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்க சேனல்கள் போட்டி போடுகின்றன. ரசிகர்களை மிஸ் செய்யாமல் சீரியல் பார்க்க வைக்க தொடர்ந்து  சேனல் குழு எதாவது புது முயற்சியை எடுத்துக் கொண்டே தான் இருக்கின்றனர். புதுமுக நடிகர், நடிகைகளை நடிக்க வைப்பது அல்லது ரசிகர்களுக்கு பரீட்சயமான முகங்களை லீட் ரோலில் போடுது, வித்தியாசமான கதையம்சம் கொண்ட சீரியல் கதையை தேர்ந்தெடுப்பது என இவர்களின் உழைப்பின் அபரிவிதமானது.

    உன் கல்யாணம் நடந்திடுமா? மகன் கோபிக்கு சவால் விட்ட ஈஸ்வரி அம்மா!

    அந்த வகையில் முன்னணி சேனல்களுக்கு போட்டியாக சிறந்த கதையம்சம் கொண்ட சீரியல்களை ஒளிப்பரப்பி வரும் கலர்ஸ் தமிழில் கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்ட சீரியல் ‘இது சொல்ல மறந்த கதை’ . கணவனை இழந்து, தன்னந்தனியாக குழந்தைகளை வளர்க்கும் ஒரு தாயின் நீதிக்கான போராட்டத்தை சித்தரிக்கும் இந்த தொடரில் லீட் ரோலில் சரவணன் மீனாட்சி புகழ் ரச்சிதா நடித்தார். அவருக்கு ஜோடியாக சத்யா சீரியல் புகழ் அமுல் பேபி விஷ்ணு நடித்து வந்தார். சாதனா என்ற ரோலில் ரச்சிதாவின் நடிப்பு பலரின் கவனத்தையும் பெற்றது.

    கொஞ்சம் ஓவரா தான் போறாங்களோ.. சர்ச்சையில் சிக்கிய சீரியல் நடிகையின் வெட்டிங் போட்டோ ஷூட்!

    இதனால் பலரும் இந்த சீரியலை விரும்பி பார்க்க தொடங்கினர். நீதிக்காக அவர் நடத்திய போராட்டம் அவருக்கு உதவும் ரிப்போட்டராக அர்ஜூன் ரோலில் விஷ்ணுவின் நடிப்பு  அப்லாஸ் அள்ளி இருந்தார். இந்நிலையில் திடீரென்று இந்த சீரியல் முடிய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சீரியல் தொடங்கி 1 வருடம் கூட முழுமையாக முடியாத நிலையில் அதற்குள் சீரியலை முடிக்க என்ன காரணம்? என கேட்டு வருகின்றனர்.



     




    View this post on Instagram





     

    A post shared by Colors Tamil (@colorstvtamil)






    இறுதி கட்டத்தை நோக்கி என வெளியாகி இருக்கும் சீரியல்  புரமோவில் பலரும் இந்த சீரியலை முடிக்க வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி