ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அம்மன் வேடத்தில் நடிக்க போகும் விஜய் டிவி நடிகை! ஏன் இந்த திடீர் முடிவு?

அம்மன் வேடத்தில் நடிக்க போகும் விஜய் டிவி நடிகை! ஏன் இந்த திடீர் முடிவு?

விஜய் டிவி நடிகை

விஜய் டிவி நடிகை

ரசிகர்களுக்கு சின்னத்திரையில் ஒரு வித்தியாசமான ரோலில் நடிப்பது பற்றி தெரிவித்து அதிர்ச்சி அளித்துள்ளார்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

திரைப்படங்களில் அம்மன் வேடங்கள் என்றாலே, பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா, பானுபிரியா மற்றும் ரம்யாகிருஷ்ணன் என்ற ஒரு சில நடிகைகள் தான் நினைவுக்கு வருவார்கள். பெரிய திரையில் அம்மன் படங்கள் ஹிட்டடித்த சீசன்கள் உள்ளன. சின்னத்திரையிலும், அப்படி ஹிட்டடித்த சீரியல்கள் சில உள்ளன. சமீபத்தில், ஒரு நடிகை அம்மன் கெட்டப்பில் ஒருக்கும் புகைப்படம் வெளியாகி, நெட்டிசன்களால் பகிரப்பட்டு வருகிறது.  நாம் இருவர் நமக்கு இருவர் பாகம் இரண்டில் இருந்து வெளியேறிய ரச்சிதா மகாலஷ்மி தான் ஒரு சீரியலில் அம்மனாக நடிக்கிறார்.

விஜய் டிவியில் நடிகையாக அறிமுகமான ரச்சிதா மகாலஷ்மி, சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமடைந்தார். தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வந்த இவர் ஒறு சிறிய பிரேக்கில் இருந்தார். பின்னர், நாம் இருவர் நமக்கு இருவர் இரண்டாம் பாகத்தில் மிர்ச்சி செந்திலுக்கு ஜோடியாக நடிக்க ஆரம்பித்தார். முதல் பாகம் கொரோனாவால் முழுமை அடையவில்லை என்றாலும், மிகப்பெரிய ஹிட் ஆனது. அதே போலவே, நாம் இருவர் நமக்கு இருவர் நாயகியாக இரண்டாம் பாகமும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றது. ஆனால், எதிர்பாராத விதமாக, அதில் நாயகியாக நடித்து வந்த ரச்சிதா மகாலஷ்மி சீரியலில் இருந்து சமீபத்தில் வெளியேறினார். ஆனால், இவர் சீரியலில் இருந்து ஏன் விலகினார் என்பதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

திரைப்பட வாய்ப்புகள் வந்துள்ளன அதனால் சீரியலில் இருந்து வெளியேறினார் என்று ஒரு சிலர் கூறினார்கள். மேலும், கன்னடப் படங்களில் நடிக்கிறார் என்று தகவல் வெளியானது. ஆனால், சமீபத்தில் தனது ரசிகர்களுக்கு சின்னத்திரையில் ஒரு வித்தியாசமான ரோலில் நடிப்பது பற்றி தெரிவித்து அதிர்ச்சி அளித்துள்ளார்.

இதையும் படிங்க.. Amir : பிக் பாஸ் அமீர் வாழ்க்கையை மாற்றிய குழந்தைகள்.. காலில் விழும் வீடியோ வைரல்!

ஒரு புதிய சீரியலில் ரச்சிதா மகாலஷ்மி ஒரு சிறிய ரோலில் அம்மனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தத் தகவலை ரச்சிதாவே உறுதிபடுத்தியுள்ளார்.

“நான் அம்மனாக ஒரு கேமியோ ரோலில் நடிக்கிறேன். எந்த சீரியல் என்று கண்டுபிடிங்க. இனிமே, சீரியல்ல அம்மன் ரோல் வந்தாலே எனக்கு அந்த ரோல்னு பிராண்டு பண்ணிடலாம். எது எப்படி இருந்தா என்ன, எனக்கு ரொம்ப சந்தோஷம். நான் எந்த சீரியல்ல இந்த அம்மன் ரோல்ல நடிக்கறேன்னு சொல்லுங்க பார்க்கலாம், கண்டிப்பா அம்மன் சீரியல்ல இல்லை” என்று தனது கேப்ஷனுடன் புகைப்படம் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க.. மளிகை கடை.. மாவு கடை.. ஸ்வீட்டு கடை.. விஜய் டிவி சீரியல்களை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!

பலரும் எந்த சீரியலில் ரச்சிதா அம்மனாக நடிக்கிறார் என்று கமென்ட்டுகள் தெரிவித்து வருகின்றனர். அம்மன் கெட்டப்பில், சிவப்பு நிறத்தில் பச்சை பார்டர் உள்ள பட்டு சேலை, பளிச்சென்ற மாலை, கையில் சூலம் மற்றும் பொருத்தமான ஆபரணங்களோடு ரச்சிதா பகிர்ந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.


சீரியல் அம்மன் வேடத்தில் ரச்சிதா பொருத்தமாக இருக்கிறாரா?

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: TV Serial, Vijay tv