Home /News /entertainment /

கணவரை பிரிந்து வாழ்கிறாரா விஜய் டிவி சீரியல் நடிகை? காதலர் தினத்தில் பரவிய தகவல்!

கணவரை பிரிந்து வாழ்கிறாரா விஜய் டிவி சீரியல் நடிகை? காதலர் தினத்தில் பரவிய தகவல்!

விஜய் டிவி நடிகை

விஜய் டிவி நடிகை

சரவணன் - மீனாட்சி சீரியல் மூலம் கம்பேக் கொடுத்தார் ரச்சிதா. தொடர்ந்து 2 சீசனிலும் இவரே மீனாட்சியாக நடித்து ஹிட் அடித்தார்.

    நேற்றைய தினம், காதலர் தினம் உலகம் முழுவதும் விமர்சையாக கொண்டாட்டப்பட்டது. காதலர்கள் பலவிதமான முறைகளில் தங்களது காதலத்தை வெளிப்படுத்தி இருப்பார்கள். குறிப்பாக சினிமா பிரபலங்கள். சோஷியல் மீடியாவில் தங்கள் துணையுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து அவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி இருந்தனர். இந்த லிஸ்டில் வெள்ளித்திரை நட்சத்திரங்கள் , சின்னத்திரை நட்சத்திரங்கள், ஹாலிவுட் பிரபலங்கள் அனைவரும் சேர்வர். இந்நிலையில் சின்னத்திரையில் பலருக்கும் ரோல் மாடலான ரச்சிதா - தினேஷ் குறித்த வருத்தமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. பிரபல செய்தி இணையதளத்தில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.

    ஆனால் இதுக்குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. அதே நேரம் இந்த தகவலுக்கு ரச்சிதா மற்றும் தினேஷ் தரப்பில் எந்த பதிலும், விளக்கமும் தந்ததாக செய்திகள் வெளியாகவில்லை.  இந்த செய்தியால் இருவரின் ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அவர்களுடைய அதிரூப்தியை சோஷியல் மீடியா கமெண்டுகளில் பார்க்க முடிகிறது.

    இதையும் படிங்க.. 5 வருஷமா லவ் பண்றோம்.. இந்த வருஷம் கல்யாணம்! ரகசியத்தை உடைத்த குக் வித் கோமாளி புகழ்

    சில வருடங்களுக்கு முன்பு விஜய் டிவி ஒளிப்பரப்பான ஹிட் சீரியல் ‘பிரிவோம் சந்திப்போம்’ . இந்த சீரியலின் மூலம் ரச்சிதா சின்னத்திரைக்கு அறிமுகம் ஆனார். இவருக்கு ஜோடியாக இந்த சீரியலில் நடித்தவர் நடிகர் தினேஷ். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற இந்த சீரியல் மூலம் ரச்சிதா - தினேஷூக்கு இடையில் காதல் மலர்ந்தது. இருவரும் பெற்றோர்கள் சம்மத்துடன் திருமணம் செய்து கொண்டனர். பின்பு, சரவணன் - மீனாட்சி சீரியல் மூலம் கம்பேக் கொடுத்தார் ரச்சிதா. தொடர்ந்து 2 சீசனிலும் இவரே மீனாட்சியாக நடித்து ஹிட் அடித்தார். ரசிகர்களின் பேராதரவுடன் ரச்சிதா தொடர்ந்து நடிக்க, விஜய் டிவி விருது விழாவில் தனது கணவருடன் வந்து விருதை கைப்பற்றினார்.

    கணவருடன் ரச்சிதா


     

    இதை தவிர்த்து பல இடங்களில் தனது கணவர் தினேஷ் பற்றி பேசி காதலை வெளிப்படுத்தினார் ரச்சிதா. பின்பு இருவரும் சேர்ந்து ஜீ தமிழில் ’நாச்சியார்புரம்’ என்ற சீரியலில் இணைந்து நடித்தனர். கொரோனா காரணமாக அந்த சீரியல் பாதியில் நிறுத்தப்பட்டது. பின்பு ரசித்தா விஜய் டிவியில் பிஸியானார். நாம் இருவர் நமக்கு இருவர் சீசனில் 2வில் மகாலட்சுமி ரோல் மூலம் என்ட்ரி கொடுத்தார்.

    சின்னத்திரை, குடும்ப வாழ்க்கை என பிஸியாக இருந்த ரச்சிதா, தற்போது கணவருடன் ஏற்பட்ட கருத்து மோதலால் தனியாக தனது குடும்பத்தினருடன் வசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து இருப்பதாக, இவர்களை சமரசம் செய்து வைக்க இரு வீட்டாரும் முயற்சித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் இருவரின் ரசிகர்கள் மத்தியிலும் மற்ற சின்னத்திரை பிரபலங்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரம் இருவரும் விரைவில் சேர வேண்டும் என்பதே அனைவரின் ஆசையாகவும் உள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Sun TV, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி