சில வருடங்களுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ஹிட் சீரியல் ‘பிரிவோம் சந்திப்போம்’ . இந்த சீரியலின் மூலம் ரச்சிதா சின்னத்திரைக்கு அறிமுகம் ஆனார். இவருக்கு ஜோடியாக இந்த சீரியலில் நடித்தவர் நடிகர் தினேஷ். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற இந்த சீரியல் மூலம் ரச்சிதா - தினேஷூக்கு இடையில் காதல் மலர்ந்தது. இருவரும் பெற்றோர்கள் சம்மத்துடன் திருமணம் செய்து கொண்டனர். பின்பு, சரவணன் - மீனாட்சி சீரியல் மூலம் கம்பேக் கொடுத்தார் ரச்சிதா. தொடர்ந்து 2 சீசனிலும் இவரே மீனாட்சியாக நடித்து ஹிட் அடித்தார். ரசிகர்களின் பேராதரவுடன் ரச்சிதா தொடர்ந்து நடிக்க, விஜய் டிவி விருது விழாவில் தனது கணவருடன் வந்து விருதை கைப்பற்றினார்.
பின்பு இருவரும் சேர்ந்து ஜீ தமிழில் ’நாச்சியார்புரம்’ என்ற சீரியலில் இணைந்து நடித்தனர். கொரோனா காரணமாக அந்த சீரியல் பாதியில் நிறுத்தப்பட்டது. பின்பு ரச்சிதா விஜய் டிவியில் பிஸியானார். நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2வில்
மகாலட்சுமி ரோல் மூலம் என்ட்ரி கொடுத்தார்.இப்படி அமைதியாக சென்ற ரச்சிதா - தினேஷ் வாழ்க்கை குறித்து கடந்த பிப்ரவரி மாதம் சோகமான செய்தி ஒன்று வெளியானது. அதாவது, இருவரும் மன வருத்தம் காரணமாக பிரிந்து இருப்பதாகவும், தனி தனி வீட்டில் இருவரும் இருந்து மன கசப்பை சரி செய்ய நேரம் எடுத்துக் கொள்வதாகவும் தகவல்கள் இணையத்தில் பரவின.
கல்யாணத்திற்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சி.. விஜய்டிவி புகழை தேடி செல்லும் வாய்ப்பு?
இந்த செய்தி குறித்து இருவர் தரப்பிலும் விளக்கம் கொடுக்கப்படவில்லை. கிட்டத்தட்ட 1 வருடங்கள் இருவரும் பேசிக் கொள்ளவில்லை எனவும் கூறப்பட்டது. அந்த நேரத்தில் ரச்சிதா நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் இருந்து விலகி கலர்ஸ் தமிழ் சேனல் பக்கம் சென்றார். இப்போது அங்கே 'இது சொல்ல மறந்த கதை’ சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ரச்சிதாவுக்கு முதல் கணவருடன் விவாகரத்து, கூடிய விரைவில் இரண்டாவது கல்யாணம் என்ற செய்திகள் காட்டுத்தீ போல் பரவ தொடங்கின. இதன் உண்மை நிலவரம் குறித்து நெட்டிசன்கள் ஆராய்ந்து வரும் நேரத்தில் ரச்சிதாவின் கணவர் தினேஷ் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
குடும்பத்திற்காக நல்லவராக மாறும் கோபி? பாக்கியலட்சுமியில் அதிரடி திருப்பம்!
இதுக் குறித்து பேசியுள்ள அவர், “
ரச்சிதாவும் நானும் பிரிவது குறித்து எந்த சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதை பற்றி யோசிக்கவும் இல்லை. எல்லா குடும்பத்தில் நடப்பது போலவே சின்ன மனகசப்பு அவ்வளவு தான். அதை சரி செய்ய இருவரும் நேரம் எடுத்து இருக்கிறோம். எல்லாம் சரியாகி மறுபடியும் நல்ல விஷயத்தில் இது முடியும் என நம்புவோம். இப்போது நடப்பதை காலத்தின் கையில் கொடுத்து இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் வசந்தம் அணி சார்பில் போட்டியிட்டு இணைச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார் நடிகர் தினேஷ்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.