Home /News /entertainment /

ஒரு பெரிய கேப்.. கடைசியில் ரச்சிதா கணவர் தினேஷ் எடுத்த சூப்பர் முடிவு!

ஒரு பெரிய கேப்.. கடைசியில் ரச்சிதா கணவர் தினேஷ் எடுத்த சூப்பர் முடிவு!

ரச்சிதா - தினேஷ்

ரச்சிதா - தினேஷ்

சில மாதங்களுக்கு முன்பு இவருக்கும் ரச்சிதாவுக்கும் மனகசப்பு என தெரிய வந்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    ஒரு பெரிய கேப்புக்கு பின்பு மீண்டும் சீரியலில் நடிக்க முடிவு எடுத்துள்ளார் ரச்சிதா கணவர் நடிகர் தினேஷ். இவர் நடிக்க இருக்கும் சீரியல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களுக்கு எப்போதும் ரசிகர்கள் மனதில் தனி இடம் உண்டு. அந்த சீரியல்கள் முடிந்தாலும் கூட ரசிகர்கள் அதன் டைட்டில் கார்டு, அதில் நடித்த நடிகர், நடிகைகளின் பெயரை அப்படியே ஞாபகத்தில் வைத்து இருப்பார்கள். அந்த வரிசையில் விஜய் டிவியில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒளிப்பரப்பான சீரியல் ‘பிரிவோம் சந்திப்போம்’ . இந்த சீரியலின் மூலம் ரச்சிதா சின்னத்திரைக்கு அறிமுகம் ஆனார். இவருக்கு ஜோடியாக இந்த சீரியலில் நடித்தவர் நடிகர் தினேஷ். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற இந்த சீரியலில் கல்யாணியும் நடித்து இருந்தார்.

    எதிர் நீச்சல் சீரியலில் அடுத்து நடக்க போவது இதுதான்..கெஸ் செய்ய முடியாத ட்விஸ்ட்!

    இந்த சீரியலில் ரீல் ஜோடியாக நடித்த ரச்சிதாவும் தினேஷூம் ரியல் ஜோடியாக மாறினர். இருவரும் பெற்றோர்கள் சம்மத்துடன் திருமணம் செய்து கொண்டனர். பின்பு, சரவணன் - மீனாட்சி சீரியல் மூலம் கம்பேக் கொடுத்தார் ரச்சிதா. தொடர்ந்து 2 சீசனிலும் இவரே மீனாட்சியாக நடித்து ஹிட் அடித்தார். அதன் பின்பு ஜீ தமிழ் பக்கம் சென்றவர் கணவர் தினேஷ் உடன் சேர்ந்து ’நாச்சியார்புரம்’ என்ற சீரியலில் இணைந்து நடித்தார். கொரோனா காரணமாக அந்த சீரியல் பாதியில் நிறுத்தப்பட்டது. அதற்கு முன்பு பூவே பூச்சூடவா என்ற சீரியலில் தினேஷ் லீட் ரோலில் நடித்தார். இந்த சீரியலில் சிவா என்ற இவரின் கதாபாத்திரம் பயங்கர ரீச் ஆனது. பின்பு அந்த சீரியலில் இருந்து விலகினார்.

    கிறிஸ்துவ மத போதகராக மாறிய 90களின் கனவுக்கன்னி நடிகை மோகினி!

    இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இவருக்கும் ரச்சிதாவுக்கும் மனகசப்பு என தெரிய வந்தது. அதற்குள் விவாகரத்து என்றெல்லாம் தகவல்கள் பரவின, ஆனால் அது உண்மையில்லை என தினேஷ் மறுத்து விட்டார். சமீபத்தில் சின்னத்திரை தேர்தலில் நின்று வசந்தம் அணியில் தினேஷ் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் பெரிய இடைவெளியிக்கு பிறகு தினேஷ் மீண்டும் நடிக்க வருகிறார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Serials (@tamilserialexpress)






    ஆம், சன் டிவியில் கூடிய விரைவில் ஒளிப்பரப்பாகவுள்ள புத்தம் புதிய சீரியலில் தினேஷ் தான் ஹீரோ என்ற தகவல் கசிந்துள்ளது. அதுமட்டுமில்லை இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக பூவே உனக்காக புகழ் ராதிகா ப்ரீத்தி நடிக்கிறார் என்ற தகவலும் இணையத்தில் பரவி வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Sun TV, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி