செந்திலுடன் ஜோடி சேர்ந்து மீண்டும் விஜய் டிவிக்கு திரும்பிய ரட்சிதா

நடிகை ரட்சிதா மீண்டும் விஜய் டிவிக்கு திரும்பியுள்ளார்.

செந்திலுடன் ஜோடி சேர்ந்து மீண்டும் விஜய் டிவிக்கு திரும்பிய ரட்சிதா
செந்தில் உடன் ரட்சிதா
  • Share this:
கொரோனா ஊரடங்கால் சீரியல்களின் பழைய எபிசோட்களை ஒளிபரப்பி வந்த விஜய் டிவி வரும் 27-ம் தேதி முதல் புதிய எபிசோட்களை ஒளிபரப்ப உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, ஆயுத எழுத்து, செந்தூரப்பூவே, தேன் மொழி உள்ளிட்ட தொடர்கள் திங்கள் முதல் சனி வரை மாலையில் இருந்து இரவு வரை ஒளிபரப்பாகும்.

அதேபோல் பிற்பகலில் ஈரமான ரோஜாவே, பொண்ணுக்கு தங்க மனசு, சுந்தரி நீயும் சுந்தரன் நானும் ஆகிய தொடர்கள் திங்கள் முதல் சனி வரை மதிய நேரங்களில் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பாக்கியலட்சுமி, நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 உள்ளிட்ட புதிய தொடர்கள் வர உள்ளன.


நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் நிறைவடைந்து சீசன் 2 ஆரம்பாகவுள்ளது. இதில் மாயன் கதாபாத்திரம் தொடரும். மாயனாக செந்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சரவணன் மீனாட்சி தொடரின் பிரபலம் ரட்சிதா நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: சென்னையிலிருந்து செங்கல்பட்டு செல்ல இ-பாஸ் வாங்கிய ரஜினிகாந்த்

சரவணன் மீனாட்சி தொடருக்கு பின் ஜீ தமிழ் தொலைகாட்சியில் நாச்சியார்புரம் தொடரில் நடித்து வந்த ரட்சிதா இத்தொடர் மூலம் மீண்டும் விஜய் தொலைக்காட்சிக்கு திரும்பியுள்ளார்.
First published: July 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading