ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ரச்சிதாவை பற்றி பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்!

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ரச்சிதாவை பற்றி பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்!

ரச்சிதா மகாலட்சுமி

ரச்சிதா மகாலட்சுமி

இந்த முறை ரச்சிதா பற்றி பேசி இருப்பது சின்னத்திரை வட்டாரத்தில்,சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பிக் பாஸ் 6ல் போட்டியாளராக களம் இறங்கி இருக்கும் ரச்சிதா மகாலட்சுமி குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கும் அதிர்ச்சி தகவல் இணையத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

  பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக களம் இறங்கியுள்ளார் சின்னத்திரை நடிகை ரச்சிதா. பெங்களூரை சேர்ந்த இவர் தமிழில் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் விஜய் டிவியில் அறிமுகம் ஆனார். அதே சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்த தினேஷை காதலித்து கரம் பிடித்தார். திருமணத்திற்கு பிறகு இருவரும் தொடர்ந்து கெரியரில் கவனம் செலுத்தி வந்தனர். ரச்சிதா தொடர்ந்து விஜய் டிவியில் அடுத்தடுத்த சீரியலில் கமிட் ஆனார். சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் 2 தொடர்களில் நடித்தார். இதற்கு இடையில் தினேஷூடன் சேர்ந்து ஜீ தமிழ் சீரியலிலும் நடித்தார்.

  ஹோம் டூர்.. இவ்வளவு பெரிய பெட்ரூமா? பிக் பாஸ் சம்யுக்தாவின் பிரம்மாண்ட வீடு!

  பின்பு சில மாதங்களுக்கு முன்பு விஜய் டிவியில் இருந்து ரச்சிதா விலகி கலர்ஸ் தமிழ் பக்கம் சென்றார். இப்போது மீண்டும் விஜய் டிவியில் பிக் பாஸ் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். கடந்த சில மாதங்களாக ரச்சிதா கணவரை பிரிந்து தனியாக வாழ்த்து வருவதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகின. பின்பு தினேஷ் இந்த தகவலை பேட்டியில் உறுதி செய்தார். தனிப்பட்ட காரணங்களால் இருவரும் பிரிந்து வாழ்கிறோம். அதற்காக ரச்சிதாவுக்கு 2வது திருமணம், அவர் காதலிக்கிறார் என்றெல்லாம் செய்திகள் வெளியாவது முற்றிலும் பொய். இதுவரை அவர் விவாகரத்து குறித்து கூட பேசியது இல்லை என தெரிவித்து இருந்தார்.

  நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது தினேஷ் மீண்டும் சின்னத்திரையில் பிஸி ஆகியுள்ளார். சக்தி, ஈரமான ரோஜாவே போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார். பிக் பாஸ்நிகழ்ச்சிக்கு ரச்சிதா சென்ற அன்று கூட இன்ஸ்டாவில் அவருக்காக போஸ்ட் போட்டு வாழ்த்து கூறி இருந்தார். பிக் பாஸ் வீட்டில் ரச்சிதா பயங்கர ஸ்போட்டிவாக விளையாடி வருகிறார். இந்நிலையில் ரச்சிதா சின்னத்திரை இயக்குனர் ஒருவரிடம் நெருங்கி பழகி வருவதாகவும் பிக் பாஸ் வீட்டில் இருநது வெளியே வந்ததும் அவரை தான் திருமணம் செய்து கொள்ள போகிறார் எனறும் நடிகர் பயில்வான் ரங்கநாதன்  யூடியூப்பில் வீடியோ ஒன்றை  வெளியிட்டுள்ளார்.

  பிக் பாஸ் ஆயிஷாவின் முன்னாள் காதலர் இவரா?

  வழக்கம் போல் வெள்ளித்திரை, சின்னத்திரை பிரபலங்களை பற்றி சர்ச்சையாக பேசி சிக்கலில் சிக்கி கொள்ளும் பயில்வான் ரங்கநாதன் இந்த முறை ரச்சிதா பற்றி பேசி இருப்பது சின்னத்திரை வட்டாரத்தில்,சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லை குழந்தை பெற்றுக் கொள்ளாத காரணத்தினால் தான் இருவரும் பிரிந்ததாகவும் பயில்வான் ரங்கநாதன் குண்டை தூக்கி போட்டுள்ளார். இதற்கான பதில் ரச்சிதா  பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின்பு தான்  தெரிய வரும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, TV Serial, Vijay tv