Home /News /entertainment /

தனது வாழ்க்கை பற்றி லைவில் பேசிய தேவயானி.. ஷாக்கில் குடும்பம்!

தனது வாழ்க்கை பற்றி லைவில் பேசிய தேவயானி.. ஷாக்கில் குடும்பம்!

புதுப்புது அர்த்தங்கள் தேவயானி

புதுப்புது அர்த்தங்கள் தேவயானி

தேவயானி தனது வாழ்க்கையில் சந்திக்கும் பலவித பிரச்சனைகளை சமாளிக்கும் திறனை இல்லத்தரசிகள் அதிகம் விரும்புகின்றனர்.

    மக்களுக்கு ஏற்ற எளிமையான குடும்பத்து கதைகளை பெரும்பாலும் எல்லோரும் ரசித்து பார்ப்பார்கள். அதிலும் குறிப்பாக இதை தினசரி சீரியலாக ஒளிபரப்பி வந்தால், அதை தவற விடாமல் பார்க்கும் இல்லத்தரசிகள் அதிகம். அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகும் புதுப்புது அர்த்தங்கள் சீரியல் தொடங்கிய சில காலங்களிலேயே நேயர்களுக்கு மிகவும் பிடித்தமான சீரியலாக மாறிவிட்டது. இதற்கு மிக முக்கியமான காரணம், சீரியலின் கதை அம்சமும் மற்றும் லட்சுமி அம்மாவாக நடிக்கும் தேவயானியின் நடிப்பு தான்.

    தேவயானி இதற்கு முன்னரே சில தொடர்களில் நடத்து அவை அனைத்துமே சூப்பர் ஹிட்டாகி உள்ளன. சினிமா திரைப்படங்களை போன்றே இவருக்கு சீரியல்களும் பொருந்தி விட்டது. சன் டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் நாடகத்தை போன்றே தற்போது இவர் நடித்து வரும் புது புது அர்த்தங்கள் சீரியலும் சிறப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் தேவயானி இந்த சீரியலில் நடிக்க போகிறார் என்றதும், பல ரசிகர்கள் இதை ஆவலாக எதிர்பார்த்திருந்தனர்.

    ரசிகர்களை வெயிட்டிங்கில் வைக்காத நயன்தாரா – விக்னேஷ் சிவன்… சூப்பர் ஹிட் பாடல் ரிலீஸ்

    இவர் இந்த தொடரில் நடிக்கும் பாத்திரத்தில், அப்படியே லட்சுமி அம்மாவாக வாழ்ந்து வருகிறார். தேவையானியின் நடிப்பால் இந்த சீரியல் தற்போது டாப் ரேட்டிங்கில் இருந்து வருகிறது. கோலங்கள் சீரியலுக்கு பிறகு சின்னத்திரையில் தேவயானிக்கு இந்த புதுப்புது அர்த்தங்கள் சீரியல் ஒரு முக்கிய மைல்கல் என்றே சொல்லலாம். ஏனெனில் அந்த அளவிற்கு இந்த சீரியலுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

    இந்த சீரியலில் ஒவ்வொரு எபிசோடுகளிலும் பலவித திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. முன்னதாக தனது மகனின் வாழ்க்கையை காப்பாற்ற களத்தில் இறங்கினார் லட்சுமி அம்மா. ஆதிராவின் கர்ப்பம், இதனால் சந்தோஷ் - பவித்ராவின் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனை. இப்படி பல அதிரடி திருப்பங்கள் இந்த தொடரில் ஏற்பட்டு வந்தது. மக்களுக்கும் இது போன்ற குடும்ப பிரச்சனைகளை தீர்க்க கூடிய கதாபாத்திரங்கள் மிகவும் பிடித்தமானது என்பதால் அதிகம் விரும்பி பார்ப்பார்கள்.

    மேலும், தேவயானி தனது வாழ்க்கையில் சந்திக்கும் பலவித பிரச்சனைகளை சமாளிக்கும் திறனை இல்லத்தரசிகள் அதிகம் விரும்புகின்றனர். தற்போது இந்த தொடரில் மேலும் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. வருகின்ற எபிசோடுகளில் எஃப்.எம் லைவ்-இல் எதார்த்தமாக தனது வாழ்க்கை குறித்த சில விஷயங்களை லட்சுமி அம்மா பகிர்ந்து கொள்கிறார்.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா செய்த ‘சீஸி ஒயிட் சாஸ் மக்ரோனி‘ – நாவூற வைக்கும் ரெசிபி வீடியோ…

    ஆனால், அது நேரலையில் செல்கிறது என்பது அவருக்கு தெரியாது போல காட்சி அமைந்துள்ளது. இருப்பினும் இவர் பேசி கொண்டிருந்த அனைத்து விஷயங்களையும் நேரலையில் மக்கள் கேட்டு வருகின்றனர். மேலும் சிலர் அந்த நேரலை சிறப்பாக உள்ளதாகவும் கூறுகிறார்கள். ஒரு சில நிமிடங்களுக்கு பிறகு எஃப்.எம் லைவ்-இல் வேறு யாரோ பேசி கொண்டிருக்கிறார் என்பதை அவர்கள் அறிகிறார்கள். உடனே லைவ் ரூமிற்கு சென்று லட்சுமி அம்மாவிடம் இது பற்றி தெரிவிக்க முயற்சிக்கிறார்கள்.

    ஆனால், கதவு லாக் ஆகி விட்டதால் அவரிடம் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர். பிறகு கதவை தட்டியும் பார்த்து விடுகின்றனர். ஆனால், லட்சுமி அம்மாவிற்கு வெளியில் நடக்கும் எதுவுமே கேட்காததால் தொடர்ந்து அவர் நேரலையில் பேசி கொண்டே இருக்கிறார். இதன் பிறகு என்ன நடக்கும் என்பதை வருகின்ற எபிசோடுகளில் பொறுத்திருந்து பார்ப்போம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Zee tamil

    அடுத்த செய்தி