Home /News /entertainment /

தேவயானி மீது செம்ம கோபத்தில் வனிதா விஜயகுமார்.. என்ன விஷயம் தெரியுமா?

தேவயானி மீது செம்ம கோபத்தில் வனிதா விஜயகுமார்.. என்ன விஷயம் தெரியுமா?

புது புது அர்த்தங்கள்

புது புது அர்த்தங்கள்

கல்யாணம், விவாகரத்து பற்றியும் கேள்விகள் கேட்க, வனிதாவுக்கு கோபம் வந்து விடுகிறது.

    ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகும் புது புது அர்த்தங்கள் சீரியலில் என்ட்ரி கொடுக்கிறார் வனிதா விஜயகுமார். அதுவும் முதல் எபிசோடிலே தேவயானி மீது செம்ம கோபத்தில் வெடிக்கிறார்.

    சின்னத்திரையில் நாள் ஒன்றுக்கு ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிப்பரப்பாகிறது. அதிலும் குறிப்பாக விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகும் சீரியல்கள் மக்களின் ஃபேவரெட் லிஸ்டில் அதிகம் இடம்பெறுகின்றன. ரசிகர்கள் தொடர்ந்து மிஸ் செய்யாமல் எபிசோடுகளை பார்த்து வருகின்றனர். அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகும் புது புது அர்த்தங்கள் சீரியலை குறிப்பிட்டு சொல்ல வேண்டும். புதுப்புது அர்த்தங்கள் சீரியல் தொடங்கிய சில காலங்களிலேயே நேயர்களுக்கு மிகவும் பிடித்தமான சீரியலாக மாறிவிட்டது. அதற்கு காரணம், சீரியலின் கதை அம்சமும் மற்றும் லட்சுமி அம்மாவாக நடிக்கும் தேவயானியின் நடிப்பு தான்.

    ஜெய்சங்கரின் பணிவினால் கிடைத்த நாயகன் வாய்ப்பு!

    தேவயானி இதற்கு முன்னரே சில தொடர்களில் நடித்துள்ளார்.  அவை அனைத்துமே சூப்பர் ஹிட்டாகி உள்ளனன. சன்  டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் நாடகத்தை போன்றே தற்போது இவர் நடித்து வரும் புது புது அர்த்தங்கள் சீரியலும் இல்லத்தரசிகள் விரும்பி பார்க்கும் தொடராக உள்ளது. . லட்சுமி அம்மாவாக, பவித்ராவுக்கு மாமியாராக நடிப்பில் பட்டையை கிளப்புகிறார். அப்படியே லட்சுமி அம்மாவாக வாழ்ந்து வருகிறார் என்றே சொல்லலாம். தேவயானியின் நடிப்பால் இந்த சீரியல் தற்போது டாப் ரேட்டிங்கில் இருந்து வருகிறது.

    cook with comali : ரசிகர்கள், போட்டியாளர்களுக்கு காத்திருக்கும் மிகப் பெரிய சர்ப்பிரைஸ்!

    தற்போது இந்த சீரியலில் சிறப்பு விருந்தினராக என்ட்ரி கொடுக்கிறார் பிக் பாஸ் புகழ் வனிதா விஜயகுமார். அதுவும் நடிகை வனிதாவாகவே இந்த சீரியலில் நடிக்கிறார். கதைப்படி தற்போது தேவயானி, பிங்க் எப்ஃப் எமில் வேலை செய்கிறார். அங்கு நேர்காணல் ஒன்றுக்காக வனிதா வருகிறார். அவரிடம் கேள்வி கேட்கப்படுகிறது. அந்த கேள்விகளை எழுதி கொடுப்பவர் தேவயானி தான். எல்லா கேள்விகளும் பர்சனல் கேள்விகளாக இருக்க, கல்யாணம், விவாகரத்து பற்றியும் கேள்விகள் கேட்க, வனிதாவுக்கு கோபம் வந்து விடுகிறது.



     




    View this post on Instagram





     

    A post shared by zeetamil (@zeetamizh)






    பிங்க் எஃப் எம்மில் இருப்பவர்களுக்கு பிபி எகிற, வனிதா, இந்த கேள்விகளை எழுதிய லட்சுமியை பார்க்க வேண்டும் என்கிறார். அது தான் தேவயானி. இதன் பின்பு என்ன நடக்கும்? என்பது எபிசோடில் தான் தெரிய வரும். வனிதாவின் இந்த மாஸ் என்ட்ரி புரமோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வனிதா என்றாலே டி.ஆர். பி தான் அப்ப, இந்த வாரம் புது புது அர்த்தங்கள் சீரியல் டி.ஆர்.பியில் எகிற போகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Zee tamil

    அடுத்த செய்தி