ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

காலில் செருப்பு கூட இல்லாமல் பஸ் ஸ்டாண்டில் விஜய் டிவி புகழ்.. ஷாக்கான ரசிகர்கள்!

காலில் செருப்பு கூட இல்லாமல் பஸ் ஸ்டாண்டில் விஜய் டிவி புகழ்.. ஷாக்கான ரசிகர்கள்!

விஜய் டிவி புகழ்

விஜய் டிவி புகழ்

பஸ் ஸ்டாண்டில் அமர்ந்தப்படி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டார் புகழ்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

விஜய் டிவி புகழ், காலில் செருப்பு கூட இல்லாமல் தலையில் கையை வைத்துக் கொண்டு பஸ் ஸ்டாண்டில் அமர்ந்தப்படி இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் ஃபேமஸ் ஆனவர் புகழ்.  விஜய்  டிவியில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று இருக்கும் புகழ் சமீபத்தில் வெளியான வலிமை, யானை, வீட்ல விசேஷம் போன்ற படங்களில் நடித்து இருந்தார். சின்னத்திரையில் இவரின் முதல் அறிமுகம்  சிரிப்புடா என்ற நகைச்சுவை நிகழ்ச்சி.

எதிர் நீச்சல் சீரியலில் அந்த நடிகை விலகவில்லை.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

ஆனால்  குக் வித் கோமாளி  நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு தான் புகழுக்கு ரசிகர்கள் அதிகம் ஆகினர்.  அதன் மூலம் கிடைத்த ரீச்சினால் தற்போது வெள்ளித்திரையில்  காமெடி ரோல்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லை திரைப்படங்களில் சின்ன சின்ன ரோல்களில் மட்டுமே தோன்றிய புகழ், தற்போது ஹீரோவாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். அதன் போஸ்டர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. Mr Zoo Keeper என பெயரிடப்பட்டிருக்கும் அந்த படத்தின் ஷூட்டிங்   ஊட்டி, பிலிப்பைன்ஸில் நடந்தது. கூடிய விரைவில் படம் திரைக்கு வரவுள்ளது.

நடிப்பில் பிஸியாக இருக்கும் புகழ், இன்ஸ்டாவிலும் செம்ம ஆக்டிவ். அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடுவார். இந்நிலையில் புகழ் தனது இன்ஸ்டா ஸ்டேட்டஸில் பஸ் ஸ்டாண்டில் அமர்ந்தப்படி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டார்.அதில் ‘ராமேஸ்வரம் காலிங்’ என கேமரா எமோஜியையும் கேப்ஷனாக போட்டுள்ளார். அப்படி என்றால் ஷூட்டிங்காக படக்குழு ராமேஸ்வரம் வர சொல்லி இருப்பார்கள் போல, அதனால் தான் தலையில் இடி விழுந்தது போல புகழ் பஸ் ஸ்டாண்டில் அமர்ந்து இருக்கிறார் என ரசிகர்கள் கெஸ் செய்துள்ளனர்.

ஏற்கெனவே குக் வித் கோமாளி பாலா பஸ் ஸ்டாண்டில் டின்னர் சாப்பிட்ட வீடியோ வைரலாகி இருந்தது. இப்போது அடுத்தது புகழின் பஸ் ஸ்டாண்ட் சிட்டிங் ஃபோட்டோவும் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Cook With Comali Season 2, Television, Vijay tv