Cook With Comali Pugazh: 'இதான் வாழ்க்கை...' மாட்டுக்கு அட்வைஸ் செய்த குக் வித் கோமாளி புகழ்!

Cook With Comali Pugazh: 'இதான் வாழ்க்கை...' மாட்டுக்கு அட்வைஸ் செய்த குக் வித் கோமாளி புகழ்!

விஜய் டிவி புகழ்

"அன்னைக்கு மட்டும் உனக்கு வாழைப்பழம்லாம் கொடுத்தாங்க இல்ல. இன்னைக்கு பாத்தியா குப்பைல ஏறி போய்ட்டு இருக்க. இதான் வாழ்க்கை புரிஞ்சுக்கோ சரியா?"

  • Share this:
வாழ்க்கை தத்துவத்தை மாட்டிடம் பேசிய வீடியோவை குக் வித் கோமாளி புகழ் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ‘குக் வித் கோமாளி’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் சீசனின் டைட்டிலை பிக் பாஸ் வனிதா விஜயகுமார் வென்றார். அதில் ரன்னராக ரம்யா பாண்டியன் இடம் பிடித்தார். இதனையடுத்து தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இரண்டாவது சீசனில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, மணிமேகலை, சிவாங்கி உள்ளிட்டோர் கலந்துக் கொண்ட நிலையில், போட்டியாளர்களாக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா ஆகிய 8 பேர் கலந்து கொண்டனர். கடந்த 3 எபிசோட்களாக சீரியல் நடிகை ரித்திகா இடம்பெற்று, சமீபத்தில் எலிமினேட் ஆனார்.



 




View this post on Instagram





 

A post shared by Vijay Tv Pugazh (@vijaytvpugazh)






நிகழ்ச்சியில் புகழும், சிவாங்கியும் அண்ணன் தங்கையாக செய்யும் ரகளைகள் கவலைகளை மறந்து வாய் விட்டு சிரிக்க வைக்கும். இவர்களுக்கு இன்ஸ்டாகிராமில் லட்சக் கணக்கான ஃபாலோயர்ஸ்களும் உள்ளனர். இந்நிலையில் தான் மாட்டுக்கு அட்வைஸ் செய்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் புகழ்.

Cook With Comali: குக் வித் கோமாளி செலிப்ரேஷன் ரவுண்டு – கெஸ்ட் யார் யாருன்னு பாருங்க!

அதில் மாட்டிடம், “என்னப்பா தம்பி எப்படி இருக்க? மாட்டு பொங்கலுக்கு கூப்ட்டேன். நீ மதிக்காம போனல்ல, இப்போ பாத்தியா சாப்பாட்டுக்கு? அதுக்கு தான் கூப்ட்டா பேசணும்...” என புகழ் கூற அங்கிருந்து மாடு நகர்கிறது. பின்னர், “கோச்சுக்காத வா.. வாழைப்பழம் வாங்கி தர்றேன்” என புகழ் சொன்னதும், மாடு சில நொடி அங்கேயே நிற்கிறது. பின்னர் மீண்டும் அங்கிருந்து கிளம்புகிறது. விடாப்பிடியாக மீண்டும் மாட்டை பின் தொடர்ந்த புகழ், “உனக்கு ஹேப்பி பர்த்டேக்கு விஷ் பண்ணேன்ல... நீ என்னா பண்ணிருக்கணும்? அன்னைக்கு மட்டும் உனக்கு வாழைப்பழம்லாம் கொடுத்தாங்க இல்ல. இன்னைக்கு பாத்தியா குப்பைல ஏறி போய்ட்டு இருக்க. இதான் வாழ்க்கை புரிஞ்சுக்கோ சரியா? ஹேப்பி பர்த்டேக்கு விஷ் பண்ணா தேங்க்ஸ் சொல்லு” என்கிறார். ஆனால் அந்த மாடு கொஞ்சம் கூட அவரை மதிக்கவேயில்லை.

இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகழ், ”நம்ம பையன மறுபடியும் பாத்து அட்வைஸ் பண்ணிருக்கேன். பட் அதே மரியாதை. நல்ல பையன் தான்...” எனக் குறிப்பிட்டுள்ளார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: