Home /News /entertainment /

5 வருஷ லவ்.. சொன்னப்படியே இந்த ஆண்டு பென்சியை கரம் பிடித்த புகழ்!

5 வருஷ லவ்.. சொன்னப்படியே இந்த ஆண்டு பென்சியை கரம் பிடித்த புகழ்!

புகழ் - பென்சி

புகழ் - பென்சி

புகழ் விஜய் டிவிக்கு வருவதற்கு முன்பே பென்சியுடன் காதலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    விஜய் டிவி புகழ் - பென்சி திருமணம் இன்று எளிமையான முறையில் நடைப்பெற்றது. 5 வருட காதலை திருமணத்தில் சிறப்பாக முடித்துள்ளார் புகழ்.

    விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சியில் வடிவேலு பாலாஜியால் அறிமுகம் செய்யப்பட்ட புகழ் இன்று உண்மையாகவே புகழின் உச்சியில் இருக்கிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழை வேற லெவலுக்கு எடுத்து சென்றது. அதன் பின்பு வெள்ளித்திரையிலும் பிஸியானார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி குக் வித் கோமாளி சீசன் 3க்கு வர முடியாத அளவுக்கு பிசியானார். அடுத்து புகழ் நடிப்பில் அவர் ஹீரோவாக நடித்திருக்கும் படமும் ரிலீஸாகவுள்ளது.



     




    View this post on Instagram





     

    A post shared by Vijay Tv Pugazh (@vijaytvpugazh)






    அதற்கு முன்பு டபுள் ஹேப்பியாக காதலி பென்சியையும் திருமணம் செய்து கொண்டார் புகழ். இந்த ஆண்டு திருமணம் என ஏற்கெனவே புகழ் அறிவித்து இருந்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தான் முதன் முறையாக இதை பற்றி பேசினார் புகழ் . விஜய் டிவிக்கு புகழ் வருவதற்கு முன்பே பென்சியுடன் காதலாம். சொல்லப்போனால் அவரும் முழுமையாக சப்போர்ட் செய்து புகழை விஜய் டிவிக்கு அனுப்பி வைத்து இருக்கிறார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Vijay Tv Pugazh (@vijaytvpugazh)






    அதன் பின்பு தனது திறமையால் வெற்றியை எட்டிய புகழ் இன்று லைஃபில் செட்டில் ஆன உடனே பென்சியை மனைவியாக்கி கொண்டார். இந்த காதல் ஜோடிக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை  கூறி வருகின்றனர். புகழ் - பென்சி திருமணம் எளிமையாக கோயிலில் நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சென்னையில் திருமண  வரவேற்பு நிகழ்ச்சி நிச்சயம் உண்டு என்கிறார்கள் சின்னத்திரை பிரபலங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Cook With Comali Season 2, Vijay tv

    அடுத்த செய்தி