தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக ஒருகாலத்தில் இருந்தவர் நடிகை தேவயானி. தற்போது சின்னத்திரையில் பிஸியாக நடித்து வருகிறார். எப்போதுமே அமைதியாக, சத்தமாக கூட பேசாத நடிகை தேவயானி, சந்தோஷத்தில் சீரியல் மருமகள், மகனுடன் நடிகர் அஜித் பாடலுக்கு வேற லெவலில் டான்ஸ் ஆடிய வீடியோ தற்போது இணையத்தில் படு வைரலாக ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
ஜீ தமிழ் சேனலில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கிய சீரியல் புதுப்புது அர்த்தங்கள். இது திங்கள் முதல் சனி வரை இரவு 8.30-க்கு ஒளிபரப்பாகி வருகிறது.லட்சுமி என்ற கேரக்டரில் நடிகை தேவயானி, ஹரி கிருஷ்ணண் என்ற கேரக்டரில் பிரபல சீரியல் நடிகர் அபிஷேக் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அதே போல் வீஜே பார்வதி, பவித்ரா ரோலில் இந்த சீரியலில் தேவயானி
மருமகளாக நடித்து வருகிறார். கதைப்படி இப்போது பவி, குட்டி மீது கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இவர்களை எப்படியாவது சேர்த்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் லட்சுமி அம்மா(தேவயானி) போராடி வருகிறார்.
இதையும் படிங்க.. காணாமல் போன ரோஜா குழந்தை.. துரைக்கு காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி!
ஆதிராவின் சதியால் குட்டியும் பவியும் பிரியும் நிலை வந்து விட்டது. ஆதிரா குறித்த உண்மையை லட்சுமி அம்மா கண்டுப்பிடித்த எபிசோடுகளை ரசிகர்கள் விரும்பி பார்த்ததால் இந்த சீரியலின் டி.ஆர்.பி ரேட்டிங் எகிறியது. அதுமட்டுமில்லை ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களில் டாப் ரேட்டிங்கில் புதுப்புது அர்த்தங்கள் சீரியல் இடம்பிடித்துவிடுகிறது. இதனால் மொத்த
சீரியல் குழுவும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
இதைத்தாண்டி மற்றொரு சந்தோஷமான நிகழ்வும் அரங்கேறியுள்ளது. புதுப்புது அர்த்தங்கள் சீரியல் 300 எபிசோடுகளை எட்டிவிட்டது. இதை அதிகாரப்பூர்வமாக சீரியல் குழு உறுதி செய்துள்ளது. இந்த 300 வது எபிசோடு நிகழ்வை கொண்டாடும் விதமாக நடிகை தேவயானி பவி மற்றும் குட்டியுடன் வலிமை படத்தில் இடம் பெற்றுள்ள நாங்க வேற மாதிரி பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.
இதையும் படிங்க.. சந்திரலேகா சீரியலில் இனி நான் இல்லை... விலகிய முக்கிய பிரபலம்!
இந்த வீடியோ ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. எப்போதுமே சாந்தமாக இருக்கும் தேவயானி சந்தோஷத்தில் அதுவும் அஜித் பாடலுக்கு நடனம் ஆடும் இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.