ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தேவையானி ஃபிளாட்டுக்கு வரும் நடிகை நமீதா... 1 வாரத்திற்கு தங்க போகிறார்!

தேவையானி ஃபிளாட்டுக்கு வரும் நடிகை நமீதா... 1 வாரத்திற்கு தங்க போகிறார்!

புதுப்புது அர்த்தங்கள் சீரியல்

புதுப்புது அர்த்தங்கள் சீரியல்

நமீதாவை வரவேற்கும் குடியிருப்பு வாசிகளிடம் தான் இன்னும் ஓரிரு நாட்கள் இங்கே தான் தங்க போவதாக கூறுகிறார்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக ஒருகாலத்தில் இருந்தவர் நடிகை நமீதா. தற்போது சின்னத்திரை சீரியல் ஒன்றில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

குஜராத்தின் சூரத் நகரில் பிறந்த நமீதா, கடந்த 2004-ல் விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் வெள்ளித்திரையில் அறிமுகமானவர் ஆவார். தமிழில் அறிமுகமாவதற்கு முன் மாடலிங் துறையில் மின்னிய நமீதா 2002-ல் முதல் முதலாக டோலிவுட்டில் அறிமுகமாகி விட்டார். தொடர்ந்து 3 தெலுங்கு படங்களில் நடித்த நமீதாவின் நான்காம் படம் தான் எங்கள் அண்ணா.

அதன் பின்னர் சத்யராஜுடன் மகாநடிகன், இங்கிலீஷ்காரன், நடிகர் சரத்குமாருடன் ஏய், சாணக்கியா உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை தனது நடிப்பு மற்றும் கவர்ச்சியால் ஈர்த்தார். தொடர்ந்து வாய்ப்புகள் அமைந்த நிலையில் பம்பர கண்ணாலே, ஆணை, கோவை பிரதர்ஸ், பச்சக்குதிரை, தகப்பன்சாமி, நீ வேணுண்டா செல்லம், வியாபாரி, நான் அவன் இல்லை உள்ளிட்ட படங்களால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

முன்னணி நடிகர்களான நடிகர் விஜயுடன் அழகிய தமிழ்மகன், நடிகர் அஜித்துடன் பில்லா உள்ளிட்ட படங்களில் நடித்து மேலும் புகழ் பெற்றார். இடையிடையே தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் நடித்தார். தொடர்ந்து மார்க்கெட் ஏறி வந்த நிலையில், அவர் தனது உடல் அமைப்பு மீது கவனம் செலுத்தாததால் ஒருகட்டத்தில் நமீதாவிற்கான வாய்ப்புகள் குறைய துவங்கின. ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த நமீதாவுக்கு அதன் பிறகு பட வாய்ப்புகள் அரிதாகவே கிடைத்தது.

பிரபல நடிகையாக பேட்டி கொடுத்து டிவி-க்களில் தலைகாட்டிய நமீதா பின்னர் டான்ஸ் ரியாலிட்டி ஷோ ஒன்றின் நடுவராக சின்னத்திரையில் தோன்றினார். கடந்த 2017-ல் தனது காதலரான வீரேந்திர சவுத்திரியை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அரசியலில் குதித்த நமீதா, பிஜேபி-க்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டது நினைவிருக்கலாம். இதனிடையே ஜீ தமிழ் சேனலில் கடந்த மார்ச் மாதம் துவங்கிய சீரியல் புதுப்புது அர்த்தங்கள். 100 எபிசோட்களை கடந்துள்ள இந்த சீரியல் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30-க்கு ஒளிபரப்பாகி வருகிறது.

நீண்ட இடைவெளிக்கு பின்பு விஜய் டிவியில் வெங்கட்.. அதுவும் ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த சீரியலில்!

லட்சுமி என்றார் கேரக்டரில் நடிகை தேவயானி, திருவேங்கடம் என்ற கேரக்டரில் பட்டிமன்ற பேச்சாளர் லியோனி, ஹரி கிருஷ்ணண் என்ற கேரக்டரில் பிரபல சீரியல் நடிகர் அபிஷேக் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இதனிடையே இந்த சீரியலில் நடிகை நமீதா திடீரென்று என்ட்ரி கொடுத்துள்ளார்.இவர் நடிக்கும் காட்சிகள் தொடர்பான ப்ரமோ வீடியோக்களை ஜீ தமிழ் தனது அதிகாரபூர்வ சோஷியல் மீடியாவில் வெளியிட்டிருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை ஒளிபரப்பான எபிசோடில் நடிகை நமீதா நடிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

' isDesktop="true" id="535719" youtubeid="FeBpq3pg_3k" category="television">

இந்த சீரியலில் நடிகை நமீதா முழுமையாக நடிக போகிறாரோ என்ற எதிர்பார்ப்பை ப்ரமோ ஏற்படுத்தி இருந்த நிலையில், தங்கள் குடியிருப்பிற்கு வரும் நமீதாவை வரவேற்கும் குடியிருப்பு வாசிகளிடம் தான் இன்னும் ஓரிரு நாட்கள் இங்கே தான் தங்க போவதாக கூறும் நமீதா அங்கு நடக்கும் பல நிகழ்வுகளில் இடம்பெறுகிறார். எனவே இந்த சீரியலில் நடிகை நமீதாவாகவே நடிக்கும் அவர் கெஸ்ட் ரோல் அடிப்படையில் தோன்றுகிறார் என்பது ரசிகர்களின் கணிப்பாக இருக்கிறது. நீண்ட நாட்களுக்கு பின் நமீதாவை சின்னத்திரையில் பார்த்த அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actress Namitha, Zee tamil