Home /News /entertainment /

மகனுக்கு கல்யாணம்.. அதிர்ச்சியில் தேவயானி! புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் அடுத்த திருப்பம்

மகனுக்கு கல்யாணம்.. அதிர்ச்சியில் தேவயானி! புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் அடுத்த திருப்பம்

புதுப்புது அர்த்தங்கள்

புதுப்புது அர்த்தங்கள்

ஆதிராவின் மொத்த குடும்பமும் சந்தோஷை வற்புறுத்தி தாலி கட்ட வைக்கின்றனர்.

    புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் ரசிகர்கள் எதிர்ப்பார்க்காத முக்கியமான திருப்பம் அரங்கேற போகிறது. ஒருபக்கம், ஆதிரா பற்றிய உண்மையை கண்டுப்பிடிக்க லட்சுமி அம்மா போராடி கொண்டிருக்கையில் சந்தோஷம் ஆதிராவை திருமணம் செய்ய முடிவு எடுத்துவிட்டார்.

    ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகும் புதுப்புது அர்த்தங்கள் சீரியல் ஒளிப்பரப்பாக தொடங்கிய சில மாதங்களிலே ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த சீரியல் லிஸ்டில் இடம்பிடித்து விட்டது. அதற்கு மிக முக்கியமான காரணம், சீரியலின் உயிரோட்டமான கதை மற்றும் லட்சுமி அம்மாவாக நடிக்கும் தேவயானியின் நடிப்பு. தேவயானி இந்த சீரியலில் நடிக்கிறார் என்று கூட சொல்ல முடியாது அப்படியே லட்சுமி அம்மாவாக வாழ்ந்து வருகிறார். அவரின் நடிப்பால் இந்த சீரியல் டாப் ரேட்டிங்கில் சென்று கொண்டிருக்கிறது. கோலங்கள் சீரியலுக்கு பிறகு சின்னத்திரையில் தேவயானிக்கு இந்த புதுப்புது அர்த்தங்கள் சீரியல் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம்.

    இதையும் படிங்க.. ஜாமீனில் வரும் வெற்றி.. அபியின் அடுத்த முயற்சி! பரபரப்பான திருப்பத்தில் தென்றல் வந்து என்னை தொடும்!

    தற்போது சீரியலில் ஆதிராவின் கர்ப்பம் குறித்த எபிசோடுகள் தான் ஒளிப்பரப்பாகி வருகிறது. ஆதிராவின் கர்ப்பத்திற்கு சந்தோஷ் தான் காரணம் என ஆதிரா ஒருபக்கம் மிரட்டி வருகிறார். இதனால் சந்தோஷ் - பவித்ரா நிம்மதி கேள்வி குறியானது. பவியை ஏமாற்றி விட்டதாக சந்தோஷ் தினம் தினம் நினைத்து வருத்தப்படுகிறார். ஒரு நாள் லட்சுமி அம்மாவுக்கு இதுக் குறித்து தெரிந்து விட்டது. தனது மகனின் வாழ்க்கையை காப்பாற்ற களத்தில் இறங்குகிறார் லட்சுமி அம்மா.

    இதையும் படிங்க.. காதலர் தினத்தன்று காதலை சொல்ல போகும் ஜீ தமிழ் சீரியல் ஜோடிகள்!

    ஆதிராவின் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று கண்டுப்பிடிக்க அவர் ஒருபக்கம் பல முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார். இதுப்பற்றி பவித்ராவுக்கு எதுவும் தெரியாது. இதற்குள் ஆதிராவின் மிரட்டலால் சந்தோஷ் கோயிலில் யாருக்கும் தெரியாமல் ஆதிராவை திருமணம் செய்ய முடிவு எடுத்து விட்டார்.



    இந்த திருமண எபிசோடு குறித்த புரமோ தான் தற்போது வெளியாகியுள்ளது. விஷயத்தை கேள்விப்பட்டு லட்சுமி அம்மா கோயிலுக்கு ஓடி வருகிறார். இந்த பக்கம் ஆதிராவின் மொத்த குடும்பமும் சந்தோஷை வற்புறுத்தி தாலி கட்ட வைக்கின்றனர். அடுத்து என்ன நடக்கும்? ஆதிராவின் கர்ப்பத்திற்கு உண்மையில் யார் காரணம்? லட்சுமி அம்மா எடுத்த டி.என்.ஏ டெஸ்ட் ரிபோர்ட் என்ன ஆச்சு? போன்ற கேள்விகளுக்கு வரும் வாரத்தில் பதில் கிடைத்துவிடும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Zee tamil

    அடுத்த செய்தி