Home /News /entertainment /

பரபரப்பான திருப்பத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்.. முல்லைக்கு எல்லா உண்மையும் தெரிந்து விட்டது!

பரபரப்பான திருப்பத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்.. முல்லைக்கு எல்லா உண்மையும் தெரிந்து விட்டது!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸில் கதிர் மறைத்த உண்மைஇப்போது முல்லைக்கு தெரிந்து விட்டது

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய திருப்பம். இத்தனை நாட்களாக கதிர் மறைத்து வைத்திருந்த உண்மை முல்லைக்கு தெரிந்து விட்டது.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் கொண்டாட்டங்கள் முடிந்து பிரச்சனை தொடங்கிவிட்டது. முக்கியமாக முல்லை கதிர் பிரச்சனை வீட்டில் புயலை கொண்டு வரப்போகிறது. முல்லைக்கு குழந்தை பிறக்கவில்லை என்ற பிரச்சனை மூர்த்தி வீட்டில் மிகப் பெரிய கவலையாகவே இருந்து வருகிறது. மீனா, தனம் அண்ணிக்கு குழந்தை பிறந்து விட்டது. அடுத்தது முல்லை - கதிருக்கு குழந்தை பிறப்பது பற்றியே அனைவரும் பேசுகின்றனர். ஒருவேளை நமக்கு குழந்தை பிறக்காதோ என முல்லை பயப்படுகிறார்.

    read more.. மாணவர்கள் பைக்கில் பள்ளிக்கு வர இனி அனுமதி இல்லை – பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

    சொந்தக்காரர்கள் அனைவரும் இதைப்பற்றி கேட்க ஆரம்பித்து விட்டனர். அதனால் முல்லைக்கு பயம் வந்து விட்டது. இதனால் தனம் இருவரையும் ஆஸ்பிட்டல் போய் செக்கப் செய்ய சொல்கிறார். இருவரும் செல்கிறார்கள். ரிசல்டில் முல்லைக்கு தான் பிரச்சனை என்று டாக்டர் சொல்லி விடுகிறார். ஆனால் இதை முல்லையிடம் சொல்லாமல் கதிர் மறைத்து விடுகிறார்.
    அதுமட்டுமில்லை முல்லையின் டாக்டர் ரிப்போர்டை பீரோவில் வைத்து பூட்டி விடுகிறார் கதிர். கதிரின் இந்த தொடர் நடவடிக்கை முல்லைக்கு சந்தேகத்தை வர வைத்து விட்டது.

    கதிர் எதோ ஒரு விஷயத்தை மறைப்பதாக புரிந்து கொண்ட முல்லை, அந்த ரிப்போர்ட்டை படிக்க நினைக்கிறார். அதற்கான முயற்சியும் எடுத்தார். ஆனால் அந்த ரிப்போர்டில் என்ன இருக்கிறது என்பதை முல்லையால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த நேரத்தில் தான் முல்லை, இந்த விஷயத்தை பற்றி மீனாவிடம் மனம் திறந்து சொல்கிறார். மீனாவும் ஒரு ஐடியா தருகிறார். அதாவது ரிப்போர்டை மறுபடியும் கதிருக்கு தெரியாமல் எடுத்துட்டு வந்தால், வேற டாக்டரிம் போய் இதைப்பற்றி கேட்கலாம் என்கிறார். முல்லையும் சரி என்கிறார்.

    இரவு, கதிருக்கு தெரியாமல் ரிப்போர்ட்டை எடுத்த முல்லை, அதை நினைத்து வருத்தப்படுகிறார். கதிருக்கு தெரியாமல் தப்பு செய்வதாக நினைத்து கண்னீர் விடுகிறார். அதே நேரம், ரிப்போர்டை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவரை விடுவதக இல்லை. மறுநாள் காலை, ரிப்போர்டை எடுத்து விட்டதாக மீனாவிடம் சொல்கிறார். மீனாவும் முல்லையும் பக்கத்தில் இருக்கும் மகப்பேறு மருத்துவமனைக்கு செல்கின்றனர். அங்கு தான் ட்விஸ்டே. முல்லைக்கு இருக்கும் பிரச்சனை பற்றி டாக்டர் எல்லா உண்மைகளையும் சொல்லி விடுகிறார். மீனாவும் முல்லையும் அதிர்ச்சியில் உறைந்து போகிறார்கள்.

    read more.. கொரோனா பரவல் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

    எந்த உண்மையை முல்லையிடம் இருந்து கதிர் மறைத்தாரோ அந்த உண்மை இப்போது முல்லைக்கு தெரிந்து விட்டது. அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, TV Serial Promos, Vijay tv

    அடுத்த செய்தி