• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிக் பாஸ் வீட்டுக்கு வைல்ட் கார்டு எண்ட்ரியில் நுழையும் பிரபலம்!

பிக் பாஸ் வீட்டுக்கு வைல்ட் கார்டு எண்ட்ரியில் நுழையும் பிரபலம்!

பிக்பாஸ்

பிக்பாஸ்

பிக் பாஸில் வரும் வாரம் நடக்கும் எலிமினேஷனிற்கான நாமினேஷன் நேற்றைய நிகழ்ச்சியில் நடைப்பெற்றது.

  • Share this:
    பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு எண்ட்ரியில் வீட்டுக்குள் செல்லும் பிரபலம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

    விஜய் டிவி-யில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடங்கியது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

    இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த பிக் பாஸ் 5 முதல் எலிமினேஷனில் மலேசியாவை சேர்ந்த நாடியா வெளியேற்றப்பட்டார். இதையடுத்து வரும் வாரம் நடக்கும் எலிமினேஷனிற்கான நாமினேஷன் நேற்றைய நிகழ்ச்சியில் நடைப்பெற்றது.

    Bigg Boss Tamil 5, Bigg Boss Tamil promo
    ரவீந்தர்


    இதைத் தொடர்ந்து விரைவில் பிக் பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு எண்ட்ரி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக தயாரிப்பாளர் ரவீந்தர் செல்லக் கூடும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: