முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சினிமாவை துரத்தும் சீரியல்கள்.. ரோஜா பிரியங்கா நடிக்கும் புதிய சீரியல் ’சீதா ராமன்’!

சினிமாவை துரத்தும் சீரியல்கள்.. ரோஜா பிரியங்கா நடிக்கும் புதிய சீரியல் ’சீதா ராமன்’!

சீதா ராமன்

சீதா ராமன்

சீதாராமன் சீரியலில் கதாநாயகனின் அம்மாவாக பிரபல திரைப்பட நடிகை ரக்‌ஷா நடிக்க உள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பிரபலமான திரைப்பட பெயர்களில் சீரியல்களை இயக்குவது இப்போது வாடிக்கையாகி வருகிறது. இந்த வரிசையில், பிரபல தொலைக்காட்சியில் விரைவில் ‘சீதாராமன்’ என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாகவிருக்கிறது. ஆஹா கல்யாணம், விக்ரம் வேதா மற்றும் சூப்பர் ஜோடி போன்ற பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் ஜீ தமிழ் டிவி, 'சீதாராமன்' என்ற சீரியலை ஒளிபரப்ப தயாராகி வருகிறது. ஆதாரங்களின்படி, புதிதாக திருமணமான பெண்கள் தங்கள் மாமியார் வீட்டில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எதிர்கொள்கிறது, சீதாராமன் சீரியல்.

இந்த சீரியலின் தயாரிப்பாளர்கள் வெளியிட்ட ப்ரோமோவில், புதிதாக திருமணமான மணமகள் தனது மாமியார் வீட்டிற்கு வெளியே மழையில் நிற்பதைக் காண முடிகிறது. சீதாராமன் சீரியலில் கதாநாயகனின் அம்மாவாக பிரபல திரைப்பட நடிகை ரக்‌ஷா நடிக்க உள்ளார்.
 
View this post on Instagram

 

A post shared by zeetamil (@zeetamizh)பிரபல தினசரி சீரியலான ரோஜாவில் ஏற்கனவே கதாநாயகியாக நடித்த பிரியங்கா தான் சீதாராமன் சீரியலில் கதாநாயகியாக நடிக்கிறார். பல வருடங்களுக்குப் பிறகு நடிகை ரக்‌ஷா மீண்டும் நடிக்க வருவது அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக உள்ளது. இந்த புதிய சீரியலின் ஒளிபரப்பு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. பிரபல நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் சீதாராமம் என்ற படம் வெளியானது, அதை நினைவுப்படுத்தும் வகையில் இந்த சீரியலுக்கு சீதாராமன் எனப் பெயரிடப்பட்டுள்ளது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Zee tamil