விஜய் டிவியின் ஆஸ்தான ஆங்கரான பிரியங்கா தேஷ்பாண்டே தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோ ட்ரெண்டிங்கில் இடம்பிடித்து இருக்கிறது. என்ன வீடியோ அது? வாங்க பார்க்கலாம்.
பிரியங்கா ஜீ தமிழ், சுட்டி டிவி, சன் மியூசிக் மற்றும் சன் டிவி ஆகிய சேனல்களிலும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார். ஆனால் இங்கு எல்லாம் கிடைக்காத அங்கீகாரம் அவருக்கு விஜய் டிவியில் கிடைத்தது.சினிமா காரம் காபி, ஒல்லிபெல்லி, கலக்கப்போவது யாரு போன்ற பிரபலமான நிகழ்ச்சிகள் பிரியங்காவை வளர்த்து விட்டனர். போட்டியாளர்கள் இல்லாமல் கூட ஒரு விஜய் டிவி ஷோ நடக்கலாம் ஆனால் பிரியங்கா இல்லாமல் நடக்காது என்கிற அளவிற்கு தற்போது கலக்கி வருகிறார் பிரியூ. விஜய்டிவியில் டிடிக்கு அப்புறம் பிரியங்கா தான் என்று மாறிவிட்டது.
இமானின் முன்னாள் மனைவி அந்த சர்ச்சை நிகழ்ச்சிக்கு செல்கிறாரா?
விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொடர்ந்து 5 சீசன்களாக தொகுத்து வழங்கி வருகிறார். இதற்காக பல விருதுகளையும் கைப்பற்றி இருக்கிறார். ஆனந்த விகடன் சினிமா விருது, விஜய் டெலிவிஷன் விருது, கலாட்டா நட்சத்திர டிவி-பிலிம் விருது என ஆங்கரிங்காக பல விருதுகளை வாரி குவித்து வருகிறார். சொந்தமாக யூடியூப் சேனலும் தொடங்கி அதிலும் தனது ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
இதற்கிடையில் தான் பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சியில் அவர் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இதனால் அவருக்கு மேலும் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி பிரியங்கா தனது 30வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த பிறந்த நாள் கொண்டாட்ட வீடியோவை சரியாக 1 மாதம் கழித்து பிரியங்கா நேற்றும் யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்.
எனக்கு அமீரை பிடிக்கும்.. மேடையில் போட்டுடைத்த பிக் பாஸ் பாவ்னி!
அந்த வீடியோவை பார்த்த பார்வையாளர்கள் வாயடைத்து போயுள்ளனர். ஒரு செகண்ட் அந்த வீடியோவை பார்ப்பவர்கள் பிரியங்காவுக்கு இவ்வளவு ஃபேன்ஸா? என வாயில் கை வைக்கின்றனர். 30 வயது என்பதால் அவருக்கு 5 பேர் கொண்ட ரசிகர்கள் குழு அவருக்கு பிடித்த 30 வகையான கிஃப்டுகளை வழங்கியுள்ளனர். இன்னொரு பக்கம் பிக் பாஸ் போட்டியாளர்கள் நிரூப், மதுமிதா, பாவ்னி, அமீர் ஆகியோர் கிஃப்ட் மழை பொழிகின்றனர்.
அதே போல் பிரியங்காவின் கல்லூரி தோழிகள் வந்து சர்ப்பிரைஸ் தருகின்றனர். இதை எல்லாம் தாண்டி வீட்டில் ஆட்டம் பாட்டம் டீஜே என கலக்குகிறார் பிரியூ. அவரின் விஜய் டிவி நண்பர்களான மாகாபா, தீனா, குரேஷி , என ஒட்டுமொத்த விஜய் டிவி ஸ்டார்களும் கேக் வெட்டி பிரியாவுக்கு சர்ப்பிரைஸ் தருகின்றனர். இது போக, அவர் அடிக்கடி செல்லும் பியூட்டி பார்லரிலும் பிரியங்காவுக்கு வெடி வைத்து ஸ்பெஷல் சர்ப்பிரைஸ். இதை எல்லாம் பார்த்து என்ன செய்வார்? ஆனந்த கண்ணீரில் தேம்பி தேம்பி அழுகிறார் பிரியங்கா.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.