Home /News /entertainment /

இது போதும் எனக்கு.. சந்தோஷத்தின் உச்சத்தில் பிரியங்கா!

இது போதும் எனக்கு.. சந்தோஷத்தின் உச்சத்தில் பிரியங்கா!

பிரியங்கா தேஷ் பாண்டே

பிரியங்கா தேஷ் பாண்டே

ரசிகர்கள் பலரும் பிரியங்காவின் கணவர் பிரவீன் குறித்தும் கேள்வி எழுப்பி வந்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    விஜய் டிவி ஆங்கர் பிரியங்காவின் இன்ஸ்டா போஸ்ட் இணையத்தில் லைக்ஸ்களை வாரி குவித்து வருகிறது.

    10 வருடங்களுக்கு மேல் சின்னத்திரையில் கலக்கி கொண்டிருக்கிறார் ஆங்கர் பிரியங்கா தேஷ்பாண்டே. டிவி ஆடியன்ஸ் மட்டுமில்லை சோஷியல் மீடியாவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரை பின் தொடர்கின்றனர். இன்ஸ்டாவில் ஏகப்பட்ட ஃபேன்ஸ் பேட்ஜ்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரியங்காவுக்கு நெகட்டிவ் ப்ளஸ் பாசிட்டிவ் கமெண்டுகள் குவிந்தன. இரண்டையும் சரிசமமாக எடுத்துக் கொண்டேன் என லைவில் கூறி இருந்தார். அதே போல் ரசிகர்கள் பலரும் பிரியங்காவின் கணவர் பிரவீன் குறித்தும் கேள்வி எழுப்பி வந்தனர்.

    கொஞ்சம் ஓவரா தான் போறாங்களோ.. சர்ச்சையில் சிக்கிய சீரியல் நடிகையின் வெட்டிங் போட்டோ ஷூட்!

    நேரம் வரும் போது கண்டிப்பாக அதுக் குறித்து பேசுகிறேன் என தெரிவித்தார். இன்ஸ்டா  லைவில் ரசிகர்களுடன் உரையாடுவது இல்லாமல் யூடியூப்பிலும் வீடியோ வெளியிட்டு வருகிறார். பிக் பஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அது முடிந்ததும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியை ராஜூவுடன் சேர்ந்து ஆங்கரிங் செய்தார். இப்போது மீண்டும் மா.கா.பாவுடன் சேர்ந்து சூப்பர் சிங்கர் சீசனை பிரியங்கா தொகுத்து வழங்கவுள்ளார். இந்த எபிசோடுகள் அடுத்த மாதம் முதல் டிவியில் ஒளிப்பரப்பாகும் என தெரிகிறது.

    மெளன ராகம் 2 சீரியல் நடிகருக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.. பொண்ணு யாரு தெரியுமா?

    இப்படி படு பிஸியாக வலம் வரும் பிரியங்கா, நேரம் கிடைக்கும்போதெல்லாம் தனது தம்பி மகளுடன் நேரத்தை செலவழிக்கிறார். சமீபத்தில் தான் பிரியங்காவின் தம்பிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த விஷயத்தை இன்ஸ்டாவில் புகைப்படத்துடன் பிரியங்கா ஷேர் செய்து இருந்தார். ரசிகர்களும் வாழ்த்துக்களை கூறி இருந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் மருமகள் வீட்டுக்கு வந்து விட்டாள் என மற்றொரு போஸ்டையும் பிரியங்கா ஷேர் செய்து இருந்தார்.




    இந்நிலையில் பரபரப்பான 1 வாரத்திற்கு பிறகு வீட்டில் மருமகளுடன் பிரியங்கா கொஞ்சி விளையாடி இருக்கிறார். அந்த தருணத்தை புகைப்படமாக எடுத்து “ இவளை பார்த்ததும் எல்லா கவலையும் தீர்ந்தன. இது போதும் எனக்கு. என் உலகம்” என்ற கேப்ஷனுடன் குழந்தையுடன் இருக்கும் ஃபோட்டோவை பிரியங்கா இன்ஸ்டாவில் ஷேர் செய்து இருக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Anchor Priyanka, Vijay tv

    அடுத்த செய்தி