Home /News /entertainment /

பிரியங்காவின் அளவில்லா மகிழ்ச்சிக்கு காரணம் இதுதானாம்.. அவரே சொல்லிவிட்டார்!

பிரியங்காவின் அளவில்லா மகிழ்ச்சிக்கு காரணம் இதுதானாம்.. அவரே சொல்லிவிட்டார்!

பிரியங்கா தேஷ்பாண்டே

பிரியங்கா தேஷ்பாண்டே

பிரியங்கா தனது தம்பி மகளுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் ஷேர் செய்து இருக்கிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    விஜய் டிவி ஆங்கர் பிரியங்கா தனது தம்பி மகளுடன் இருக்கும் உணர்ச்சிபூர்வமான படத்தை இன்ஸ்டாவில் ஷேர் செய்து இருக்கிறார்.

    சின்னத்திரையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக வலம் வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. பிரியங்காவின் இந்த 10 ஆண்டு பயணத்தை விஜய் டிவி சமீபத்தில் பிரம்மாண்டமாக கொண்டாடி முடித்தது. சின்னத்திரை டாப் ஆங்கர் லிஸ்டில் இருக்கும் பிரியங்கா தற்போது பிபி ஜோடிகள், ராஜூ வீட்ல பார்ட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸில் பிரியங்காவின் பயணத்தை குறிப்பிடாமல் இருக்க முடியாது. ரன்னர் அப் இடத்தை பிடித்தாலும் அவர் பல நெகடிவ் விமர்சனங்களையும் சந்தித்து இருந்தார்.

    லவ்வோ லவ்வு.. சினேகன் - கன்னிகாவின் சிம்பிளான திருமண நாள் கொண்டாட்டம்!

    ஆங்கரிங் இல்லாமல் தனியாக யூடியூப் சேனலும் தொடங்கி அதன் மூலமும் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். 1 மில்லியனை தாண்டி சப்ஸ்கிரைபர்கள் தொடர்கின்றனர். பிரியங்காவின் தம்பி ரோஹித்திற்கு கடந்த 2020 ல் திருமணம் நடைபெற்றது. லாக்டவுனில் தம்பியின் திருமணத்தை யூடியூப்பில் லைவாக வெளியிட்டு தனது மகிழ்ச்சியை ரசிகர்களுடன் ஷேர் செய்து இருந்தார். இதனிடையே அவரின் தம்பியின் மனைவிக்கு தற்போது பெண் குழந்தை பிறந்து உள்ளது.பிக் பாஸ் வீட்டுக்கு ஒருமுறை அவரது தம்பியும் வந்து இருந்தார். தான் அத்தையான விஷயத்தை ஏற்கெனவே ஃபோட்டோ வெளியிட்டு பிரியங்கா ரசிகர்களுடன் ஷேர் செய்து இருந்தார்.




    இந்நிலையில் தற்போது பிரியங்கா தம்பி மகளுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் ஷேர் செய்து இருக்கிறார். அதுவும் “ஆன்ட்டி கிட்ட வா மா” என்ற டேக் லைனையும் குறிப்பிட்டுள்ளார். சமீபகாலமாக பிரியங்கா தனது அம்மா, தம்பி, இப்போது அவரின் மகள் என இவர்கள் தான் தனது சந்தோஷம், லைஃப் என எல்லா இடத்திலும் குறிப்பிட்டு வருகிறார். பிரியங்காவின் கணவர் பிரவீன் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தாலும் பிரியங்கா அந்த சர்ச்சைகளுக்கு பதில் கூறுவதாக இல்லை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Anchor Priyanka, Vijay tv

    அடுத்த செய்தி