Home /News /entertainment /

கடைசியில் பிரியங்கா தேஷ்பாண்டே எதிர்பார்த்த அந்த நாள் வந்துடுச்சு!

கடைசியில் பிரியங்கா தேஷ்பாண்டே எதிர்பார்த்த அந்த நாள் வந்துடுச்சு!

பிரியங்கா தேஷ்பாண்டே

பிரியங்கா தேஷ்பாண்டே

சின்னத்திரையில் பிரியங்கா தேஷ்பாண்டேக்கு தனி பெயர், புகழ், ரசிகர்கள் எல்லாமே உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    விஜய் டிவி பிரியங்கா தேஷ்பாண்டே இத்தனை மாதமாக காத்திருந்த அந்த நாள் வந்து விட்டது என இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார். அந்த ஸ்பெஷல் தருணத்தை வித்தியாசமாக கொண்டாடிய புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளார்.

    சூப்பர் சிங்கர் ஆங்கர் பிரியங்கா சமீபத்தில் தனது கெரியரில் 10 ஆண்டுகளை நிறைவு செய்து இருந்தார். இந்த சிறப்பான விஷயத்தை விஜய் டிவி கேக் வெட்டி கொண்டாடியது. பிபி ஜோடிகள் சீசன் 2வில் பிரியங்காவுக்காக  கேக் கட்டிங் ஸ்பெஷல் மொமண்டகள் அரங்கேறி இருந்தன. சின்னத்திரையில் பிரியங்கா தேஷ்பாண்டேக்கு தனி பெயர், புகழ், ரசிகர்கள் எல்லாமே உள்ளது. டிடிக்கு பிறகு எல்லோருக்கும் பிடித்தமான ஆங்கராக பிரியங்கா வலம் வருகிறார்.

    பாலிடிக்ஸ் ஐடியா இருக்கா? உதயநிதி ஸ்டாலினை சந்தித்த சீரியல் நடிகை!

    இந்த நம்பிக்கையில் தான் பிக் பாஸ் சீசன் 5க்கு சென்றார். ஆனால் அந்த ஷோ மூலம் சில நெகட்டிவான கமெண்டுகளும் பிரியங்காவை சுற்ற தொடங்கினார். வெளியில் வந்த பின்பும் அவை பிரியங்காவை தொடர்ந்தனர். அந்த நேரத்தில் எல்லாம்  பிரியங்காவுக்கு பயங்கர சப்போர்ட் கொடுத்தது அவரின் குடும்பம் மற்றும் நண்பர்கள். பிரியங்காவுக்கு அம்மா, தம்பி மட்டுமே. இவர்கள் தான் என் உலகம் என அடிக்கடி கூறுவார்.

    பல இடங்களில் அம்மா, தம்பி பற்றி பேசும் போதே அழ தொடங்கிவிடுவார். இது பிரியங்காவின் வழக்கமான செயல்களில் ஒன்று. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பிரியங்கா வீட்டுக்கு புது வரவு வந்தது. அதாவது அவரின் தம்பி ரோகித்துக்கு  பெண் குழந்தை பிறந்தது. இந்த தருணத்தை ”ஆண்டி கிட்டவாமா” என்ற கேப்ஷனுடன் இன்ஸ்டாவில் பிரியங்கா ஷேர் செய்து இருந்தார். இதற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி இருந்தனர்.

    சன் டிவி சீரியல் நடிகருடன் ராஜ்கிரண் மகள் ஜீனத் காதல் திருமணமா?

    இந்நிலையில் பிரியங்காவின் தம்பி மகள், 6 மாதம் கழித்து அவரின் வீட்டுக்கு வந்து விட்டார். இந்த தருணத்தை இன்னும் ஸ்பெஷலாக்க மொத்த வீட்டையும் அலங்கரித்து கலர்ஃபுல்லாக மாற்றி, அவரின் பெயர் எழுதி இருக்கும் டீஷர்ட்டை பிரியங்கா, அவரின் அம்மா, தம்பி ஒரே மாதிரியாக அணிந்து கொண்டு குழந்தைக்கு  வார்ம் வெல்கம் கொடுத்து வரவேற்று இருக்கிறார்கள். இந்த தருணாங்களை புகைப்படத்துடன் பிரியங்கா இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார்.




    “கடைசியில் நான் எதிர்பார்த்த நாள் வந்துவிட்டது. ஹேப்பி ஓணம் மக்களே. இதை விட வேறென்ன வேண்டும், அவ வந்துட்டா வந்துட்டா ஆண்டி கிட்டவாம்மா” என கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Anchor Priyanka, Vijay tv

    அடுத்த செய்தி