• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • 'என்னோட பக்கெட் லிஸ்ட்ல பிக் பாஸும் ஒண்ணு’ - விஜய் டிவி பிரியங்கா தேஷ்பாண்டே!

'என்னோட பக்கெட் லிஸ்ட்ல பிக் பாஸும் ஒண்ணு’ - விஜய் டிவி பிரியங்கா தேஷ்பாண்டே!

வி.ஜே.பிரியங்கா

வி.ஜே.பிரியங்கா

தனக்கென பெரிய லட்சியம் ஏதும் இல்லை எனக் குறிப்பிட்ட பிரியங்கா, எல்லாமே குறைந்த கால டார்கெட் தான் என்றார்.

  • Share this:
    விஜய் டிவி-யின் பிக் பாஸ் 5-ம் சீசனில் போட்டியாளராகக் களமிறங்கியிருக்கிறார் பிரியங்கா தேஷ்பாண்டே.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறும். அதில் பிக் பாஸ் நிகழ்ச்சி முக்கியமானது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இது எப்போதும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெறும். எப்போதும் ஜூன் மாத இறுதியில் தொடங்கும் பிக் பாஸ் கடந்த வருடம் கொரோனா தொற்றால் தாமதமாக தொடங்கியது.

    இந்த வருடம் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தற்போது பிக் பாஸ் 5 நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கியுள்ளது. முதலில் வீட்டை சுற்றிக் காட்டிய கமல் பின்னர் போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி வருகிறார்.

    அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 5-ல் ஆறாவது போட்டியாளராக விஜய் டிவி பிரியங்கா கலந்துக் கொண்டுள்ளார். தனக்கென பெரிய லட்சியம் ஏதும் இல்லை எனக் குறிப்பிட்ட பிரியங்கா, எல்லாமே குறைந்த கால டார்கெட் தான் என்றார். அப்படி இருக்கும் பக்கெட் லிஸ்டில் ஒன்று பிக் பாஸ் செல்வது என்றும் குறிப்பிட்டார்.



    கடந்த சில வாரங்களாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரியங்கா கலந்துக் கொள்வதாக செய்திகள் வலம் வந்தன. தற்போது அது உண்மையாகியிருக்கிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: