Home /News /entertainment /

பிக் பாஸ் பிரியங்காவுக்கு என்ன ஆச்சு? பாதியில் போனதால் ஃபைனல்ஸுக்கு வருவாரா? குழப்பத்தில் ரசிகர்கள்!

பிக் பாஸ் பிரியங்காவுக்கு என்ன ஆச்சு? பாதியில் போனதால் ஃபைனல்ஸுக்கு வருவாரா? குழப்பத்தில் ரசிகர்கள்!

பிக் பாஸ் பிரியங்கா

பிக் பாஸ் பிரியங்கா

பிக் பாஸ் நேற்றைய நிகழ்ச்சியிலும் பாதிக்கு மேல் பிரியங்காவை பார்க்க முடியவில்லை.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இறுதி நிகழ்ச்சி நாளை (16.1.22) ஒளிப்பரப்பாகவுள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் கடைசி நேரத்தில் ஏகப்பட்ட ட்விஸ்டுகள் அரங்கேறி வருகின்றன. இதனால் ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். அதே போல் பிரியங்கா பிக் பாஸ் வீட்டில் இருந்து பாதியில் வெளியேறியதாக வெளியான தகவலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர் ஃபைனல்ஸுக்கு வருவாரா? என்ற சந்தேகமும் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

    18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதி வாரத்தில் இருக்கிறது. நாளை வெற்றியாளர் யார்? என்பது தெரிந்து விடும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் வாய்ப்பு ராஜூ மற்றும் பிரியங்காவுக்கு தான் அதிகம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. பிக் பாஸ் வெற்றியாளருக்கான மக்களின் வொட்டிங் புராசஸூம் முடிந்து விட்டது. ஜெயிக்க போவது யார்? 50 லட்சம் யாருக்கு? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது. இந்த நேரத்தில் தான் பிக் பாஸ் வீட்டில் கடைசி நேர ட்விஸ்டாக ஏகப்பட்ட பரபரப்பு, எதிர்பாராத சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

    இதையும் படிங்க.. சூர்யா முதல் சிவகார்த்திகேயன் வரை சினிமா பிரபலங்களின் பொங்கல் கொண்டாட்ட க்ளிக்ஸ்!

    பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக கலந்து கொண்ட விஜய் டிவி ஆங்கர் பிரியங்கா, கலவையான விமர்சனங்களை பெற்றார். அவரின் சிரிப்பு, கோபம், அழுகை, சண்டை, அன்பு, எல்லாமே பலவகையான விமர்சனங்களை பெற்றது. இருந்தாலும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் ஒருபக்கம் இருக்கிறது. பிரியோ ஃபேன்ஸ் என்ற பெயரில் அவர்கள் பிரியங்காவுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.  அதே போல் பிக் பாஸ் வீட்டிலும் எல்லோருக்கும் பிடிக்க போட்டியாளராக இருப்பவரும் பிரியங்கா தான். இந்நிலையில் நேற்று முன் தினம் பிரியங்காவுக்கு திடீரென்று உடல்நிலை மோசமானது. உடனே அவரை பிக் பாஸ் குழு மருத்துவமனை அழைத்து சென்றனர். இதனால் பிக் பாஸ் வீட்டில் அவரை பார்க்க முடியவில்லை. இதனால் அவரின் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர். கடைசியில் பிரியங்கா மருத்துவமனையில் இருந்து திரும்பினார். அவரை ராஜூ, வருண், அமீர், நிரூப் ஆகியோர் விசாரித்தனர்.

    இந்நிலையில், நேற்று பிரியங்காவின் உடல்நிலை மிகவும் மோசமானதால் அவரை வீட்டுக்கு போக சொல்லி பிக் பாஸ் அறிவுருத்தியதாக கூறப்படுகிறது. ஆனாலும் பிரியங்கா பாதியில் செல்ல சம்மதிக்கவில்லை என்றும், உடல்நிலை தான் ரொம்ப முக்கியம் இப்போது நீங்கள் வீட்டுக்கு செல்வதால் எந்த பிரச்சனையும் இல்லை, ஃபைனல்ஸூக்கு நேரடியாக வந்து கலந்து கொள்ளலாம் என பிக் பாஸ் அவரை சமாதானம் செய்ததாகவும் இணையத்தில் தொடர்ந்து செய்திகள் வெளிவந்தன.நேற்றைய நிகழ்ச்சியிலும் பாதிக்கு மேல் பிரியங்காவை பார்க்க முடியவில்லை.

    இதையும் படிங்க.. சின்னத்திரை பிரபலங்களின் இன்ஸ்டா பொங்கல்.. குவியும் லைக்ஸ்!

    இதனால் பிரியங்கா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதாக நம்பபடுகிறது. இந்த விஷயத்தால் அவரின் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். வின்னர் இடத்திற்கு ராஜூ மற்றும் பிரியங்காவுக்கு இடையில் கடுமையான போட்டி நிலவி வரும் நேரத்தில் பிரியங்கா இப்படி பாதியில் சென்றது அவரின் ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது. அதே போல் அவர் பிக் பாஸ் ஃபைனல்ஸூக்கு வருவாரா? என்ற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். இதற்கான விடை நாளை கிடைத்துவிடும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv

    அடுத்த செய்தி