ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வீட்டிற்குள் பார் செட்டப்.. பிரமிக்க வைக்கும் சீரியல் நடிகையின் பிரம்மாண்ட வீடு!

வீட்டிற்குள் பார் செட்டப்.. பிரமிக்க வைக்கும் சீரியல் நடிகையின் பிரம்மாண்ட வீடு!

பிரியா பிரின்ஸ்

பிரியா பிரின்ஸ்

கிச்சனுக்கு அருகிலே ராயல் லுக்கில் பார் செட்டப்பையும் அமைத்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சீரியல் நடிகை பிரின்ஸ் பிரியாவின் ஹோம் டூர் வீடியோ இணையத்தில் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

  சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் முக்கிய சீரியல்களில் ஒன்று கண்ணான கண்ணே. திங்கள் முதல் சனி வரை சன் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் ரசிகர்களின் பெரும் வரவேற்புடன் டெலிகாஸ்ட் ஆகி வருகிறது.இதில் மெயின் ரோலில் நிமிஷிகா மற்றும் ராகுல் ரவி ஆகியோர் நடித்து வருகின்றனர். நடிகர் பப்லு அப்பா ரோலில் நெகடிவ் ஷேடில் நடித்து வருகிறார்.

  மேலும் மேனகா என்கிற நெகடிவ் ரோலில் நடிகை பிரியா பிரின்ஸ் நடித்து வருகிறார். செய்தி வாசிப்பாளர், நடிகை என பன்முகத்திறமை வாய்ந்த பிரியா பிரின்ஸ் தற்போது வெள்ளித்திரை, சின்னத்திரையில் இரண்டிலும் படு பிஸி.

  5 வது மாதம்..சிம்பிளாக வளைகாப்பு விழா நடத்திய சீரியல் நடிகை!

  ‘பசங்க’ திரைப்படத்தில் வெள்ளித்திரையிலும் தோன்றிய அவருக்கு பத்தாவது படிக்கும் மகள் இருக்கிறார் என்று சொன்னால் நம்பவே மாட்டார்கள். அந்த அளவிற்கு இளமையாகத் தன்னை வைத்துக்கொண்டிருக்கும் பிரியா, தன்னுடைய பியூட்டி சீக்ரெட்டுகளையும் அவருடைய தனிப்பட்ட யூடியூப் சேனலில் பகிர்கிறார். இந்நிலையில் தற்போது புதியதாக வாங்கி குடியேறிய ஹோம் டூர் வீடியோவையும் தனது ரசிகர்களுக்காக யூடியூப் சேனலில் பிரியா பிரின்ஸ் வெளியிட்டுள்ளார்.

  ' isDesktop="true" id="820710" youtubeid="l1_VExY4O94" category="television">

  வீட்டு கதவு தொடங்கி சோஃபா என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து வாங்கி இருக்கிறார். டெல்லியில் இருந்து ஷேர்களை ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். கிச்சனுக்கு அருகிலே ராயல் லுக்கில் பார் செட்டப்பையும் அமைத்துள்ளார். தனது கனவு வீட்டை அடைய பல கஷ்டங்களை தாண்டி இந்த இடத்தை அடைந்திருப்பதாகவும் பிரியா அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமில்லை இந்த வீட்டை ஒருநாள் ஷூட்டிங் விடவும் விருப்பப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரியா பிரின்ஸின் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவரை வாழ்த்தியுள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Sun TV, TV Serial