Home /News /entertainment /

அந்த நிகழ்ச்சிக்கு மட்டும் ஓகே சொல்வேன். விஜய் டிவி நடிகை சொன்ன ஷாக்கிங் தகவல்!

அந்த நிகழ்ச்சிக்கு மட்டும் ஓகே சொல்வேன். விஜய் டிவி நடிகை சொன்ன ஷாக்கிங் தகவல்!

பிரியா மஞ்சுநாதன்

பிரியா மஞ்சுநாதன்

பிரியா மஞ்சுநாதன், சரியாக சமைக்காமல் செஃப்கள் இருவரிடமும் நிறைய திட்டு வாங்கியுள்ளார்.

  விஜய் தொலைக்காட்சியில் ஒரு சில நிகழ்ச்சிகளில் தலைகாட்டிவிட்டாலே போதும் அவர்களை ரசிகர்கள் எப்போதும் மறப்பது கிடையாது. மேலும் விஜய் தொலைக்காட்சியில் மூலம் பலர் பிரபலங்களாக மாறியுள்ளனர். அதில் ’ஜோடி’ என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் பிரியா மஞ்சுநாதன்.

  கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சி மூலமாக சின்னத்திரையில் கால் எடுத்து வைத்த இவர், விஜய் டி.வியி. ஜோடி நிகழ்ச்சியில் சுனிதாவுடன் சேர்ந்து அசத்தலாக நடனமாடி ரசிகர்கள் மனதை வென்றார். விஜய் தொலைக்காட்சியில் கவின் நடிப்பில் வெளியான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்தார். சின்னத்திரையில் பிரபலமாக வலம் வந்து கொண்டிருந்த பிரியா மஞ்சுநாதன், திடீரென டி.வி. நிகழ்ச்சிகளுக்கு குட்பை சொல்லிவிட்டு திருமணம் செய்து கொண்டார்.

  ஒரு எபிசோடுக்கு 2 லட்சமா? சூப்பர் சிங்கர் பிரியங்கா பற்றி தீயாய் பரவும் தகவல்!

  2020ம் ஆண்டு மார்ச் மாதம் சுந்தர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் பிரியா மஞ்சுநாதன். லண்டனில் வேலை பார்த்து வந்த சுந்தர் தற்போது சென்னையில் பணி செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. சின்னத்திரையை விட்டு விலகினாலும், சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் பிரியா மஞ்சுநாதன், தனது ஃபேமிலி போட்டோக்களை சோசியல் மீடியாவில் தொடர்ந்து பதிவேற்றி வருகிறார்.

  அவ்வப்போது ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கும் பதிலளித்து வருகிறார். அப்படி சோசியல் மீடியாவில் ஒருவர் பிரியா மஞ்சுநாதனிடம், ‘நீங்கள் மீண்டும் சின்னத்திரைக்கு வருவீர்களா?’ என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அவர், ‘அதற்கான அவசியம் இப்போது ஏற்படவில்லை. குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் கம்பேக் கொடுப்பேன்’ எனத் தெரிவித்துள்ளார். இந்த செய்தி தற்போது ரசிகர்களிடையே ஆவலை தூண்டியுள்ளது.

  என்னை மன்னித்து விடு.. கணவரிடம் மன்னிப்பு கேட்ட சுந்தரி கேப்ரில்லா!

  என்னடா இது சின்னத்திரையே வேண்டாம் என திருமணமாகி செட்டில் ஆனவர், குக் வித் கோமாளியை மட்டும் குறிப்பிட்டு சொல்கிறாரே என குழப்பமாக இருக்கிறதா?. இதற்கு முன்னதாக விஜய் தொலைக்காட்சியில் ‘கிச்சன் சூப்பர் ஸ்டார்’ என்ற ரியாலிட்டி ஷோவை செஃப் தாமு மற்றும் வெங்கட் பட் ஆகியோர் இணைந்து தொகுத்து வழங்கினர். ஆனால் அந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி போல் காமெடி ஷோ கிடையாது, சீரியஸான சமையல் நிகழ்ச்சி.   
  View this post on Instagram

   

  A post shared by Priya Manjunathan (@priyaholic)


  அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரியா மஞ்சுநாதன், சரியாக சமைக்காமல் செஃப்கள் இருவரிடமும் நிறைய திட்டு வாங்கியுள்ளார். தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி உச்சத்தில் சென்று கொண்டிருக்கிறது. பட்டி தொட்டி முதல் ஃபாரீன் வரை ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட இந்நிகழ்ச்சியில் கம்பேக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என பிரியா மஞ்சுநாதன் நினைக்கலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

  மேலும் கிச்சன் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் திட்டு வாங்கியது போல், இல்லாமல் செஃப் தாமு மற்றும் வெங்கட் பட் உடன் கலகலப்பாக சமைக்க கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் என்றும் பிரியா மஞ்சுநாதன் நினைக்கலாம் இல்லையா?, அதனால் தான் குறிப்பிட்டு குக் வித் கோமாளி நிகழ்ச்சியை சொல்லியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: TV Serial, Vijay tv

  அடுத்த செய்தி