ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

''என்ன சொல்றதுனு தெரியல'': இயக்குநரின் மறைவு குறித்து பிரியா பவானி ஷங்கர் உருக்கம்

''என்ன சொல்றதுனு தெரியல'': இயக்குநரின் மறைவு குறித்து பிரியா பவானி ஷங்கர் உருக்கம்

பிரியா பவானி ஷங்கர்

பிரியா பவானி ஷங்கர்

தாய் செல்வம் இயக்கிய கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் நாயகியாக நடித்து புகழ் பெற்றவர் பிரியா பவானி ஷங்கர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

திரைப்படங்களுக்கு நிகராக விஜய் டிவி சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் எப்பொழுதும் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியின் பிரபல தொடர்களான தாயுமானவன், கல்யாணம் முதல் காதல் வரை, மௌனராகம், நாம் இருவர் நமக்கு இருவர், ஈரமான ரோஜாவே போன்ற சின்னத்திரை தொடர்களை இயக்கியவர் தாய் செல்வம்.

இவர் தற்போது இவர் ஈரமான ரோஜாவே 2 தொடரை இயக்கிவருகிறார். இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார்.

அவரது மறைவு செய்தி சின்னத்திரை ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தொலைக்காட்சி தனது சமூக வலைதள பக்கங்கள் மூலம் இயக்குநர் தாய் செல்வத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.

தாய் செல்வம் இயக்கிய கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் நாயகியாக நடித்து புகழ் பெற்றவர் பிரியா பவானி ஷங்கர். இயக்குநர் தாய் செல்வத்தின் மறைவுக்கு பிரியா பவானி ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவரது பதிவில், கல்யாணம் முதல் காதல் வரை தொடரி இயக்குநர் தாய் செல்வத்தின் மறைவு எனக்கு பழைய நினைவுகளுக்கு என்னை கொண்டுசெல்கிறது. கோபக்காரர் என அறியப்படும் இவர், என்னை தவறுகள் செய்து அதிலிருந்து கற்றுக்கொள்ள அனுமதித்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு மனதளவில் வெறுமையாக உணர்கிறேன். என்ன சொல்வதென்று தெரியவில்லை என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

First published:

Tags: Priya Bhavani Shankar, Vijay tv