முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கை, கால் வரல... பேசவும் முடியல... சின்னத்திரை பிரபலம் ப்ரீத்தா ராகவ் கண்ணீர்

கை, கால் வரல... பேசவும் முடியல... சின்னத்திரை பிரபலம் ப்ரீத்தா ராகவ் கண்ணீர்

ப்ரீத்தா ராகவ்

ப்ரீத்தா ராகவ்

மாதவன் மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த ‘டும் டும் டும்’ படத்தின் மூலம் சினிமாவிலும் அறிமுகமானார் ப்ரீத்தா.

  • Last Updated :

தனது அம்மா கீழே விழுந்து, கை, கால்கள் வராமல் பேசவும் முடியாமல் தவிப்பதாக சின்னத்திரை பிரபலம் ப்ரீத்தா ராகவ் கண்ணீருடன் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

சின்னத்திரையில் மக்கள் மத்தியில் பிரபலமான ஜோடி ராகவ்–பிரீத்தா. கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்றனர். ப்ரீத்தாவின் கணவர் ராகவ் பல சீரியல்களில் மட்டுமல்லாமல், சினிமாவிலும் நடித்துள்ளார். சினிமாவில் மியூசிக் கம்போஸர், தொகுப்பாளர், இயக்குனர் என பல திறமைகளைக் கொண்டுள்ளார்.

ராகவ் தன்னுடன் பணி புரிந்த நடிகை ப்ரீத்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சின்னத்திரையில் ப்ரீத்தாவும் சமையல் குறிப்பு, ஆன்மீகம் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பல சீரியல்களிலும் நடித்துள்ளார். மாதவன் மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த ‘டும் டும் டும்’ படத்தின் மூலம் சினிமாவிலும் அறிமுகமானார்.

பாகுபலி 2 சாதனை உடைப்பு - வசூலை அள்ளும் கேஜிஎப் சேப்டர் 2!

ராகவ் ப்ரீத்தா தம்பதிக்கு தனிஷா என்ற ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் ப்ரீத்தா இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்று பதிவிட்டுள்ளார். அதில், “என்னுடைய அம்மாவிற்காக எல்லோருமே பிரார்த்தனை செய்யுங்கள். இன்னைக்கு காலையில் ஒரு சம்பவம் நடந்தது. அது என்னவென்றால், என்னுடைய அம்மா தவறி கீழே விழுந்து விட்டார். அதனால் அவர்களால் பேச முடியவில்லை, கை-கால் செயலிழந்து விட்டது.


நடிகை மீனா கர்ப்பம்? வைரலாகும் வீடியோ!

இதற்கு முன்பே என் அம்மாவிற்கு இரண்டு முறை சர்ஜரி செய்து இருக்கிறோம். அதற்கான ட்ரீட்மெண்ட் போய் கொண்டிருக்கும் போது இடையில் இப்படி நடந்திருப்பது ரொம்ப மன வேதனையாக இருக்கிறது. தயவுசெய்து எல்லோரும் என்னுடைய அம்மாவிற்காக வேண்டிக்கொள்ளுங்கள். அவர்கள் சீக்கிரம் குணமடைந்து வரவேண்டும்” என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: TV Serial, Vijay tv